வி சி டி எஸ், அதேகொம் மற்றும் மைத்திரி இந்தியா இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் வன்னிப்பேர் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுத்தல், குறைத்தல், தீர்வு காணுதல் என்னும் தலைப்பில் கருத்தரங்கினை 5 .3. 2022 சனிக்கிழமை அன்று பிற்பகல் 11.30 முதல் 2 மணி வரை வன்னிப்பேர் கிராம நூலக கட்டிடத்தில் நடைபெற்றன. இந்த கருத்தரங்கினை வன்னிப்பேர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வழக்கறிஞர் திரு.D. ரவி அவர்கள் தலைமையேற்று போக்சோ சட்டம் குறித்தும், குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் குறித்தும் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு கருத்துரையை வி சி டி எஸ் நவஜோதி பெண்கள் இயக்க அமைப்பாளர் திருமதி. கௌசல்யா அவர்களும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பாஸ்கரன் அவர்களும், பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையசுகாதார ஆய்வாளர் திரு .அருள் பாண்டியன் அவர்களும், திரு. பார்த்திபன் அவர்களும், வி சி டி எஸ் பணியாளர் திரு. ஏசுராஜ் அவர்களும் கருத்துரை வழங்கினர். இந்த கருத்தரங்கினை விசிடி எஸ் களப்பணியாளர் செல்வி பா. சுகந்தி அவர்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சியில் 47 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.




Leave a comment