29.01.2023 , காரைக்கால் மாவட்டம் , பூவம் கிராமத்தில் சென்று இளைஞர்களை ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் 34 இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
முதலில் சென்ற மாதம் நடந்த பயிற்சி வீட்டில் உணவு உண்ணும் நடைமுறை மற்றும் கடைசியாக உணவு உண்ணுதல் குறைந்த அளவில் உணவு கிடைத்தல் என்ற பயிற்சி குறித்தும் பெண்களுக்கான முன்னுரிமை பெண்களுக்கான நிர்பந்தம் ஆண்களுக்கான முன்னுரிமை ஆண்களுக்கான நிர்பந்தம் குறித்த பயிற்சியின் பின்னோட்ட கருத்தினை பெறப்பட்டது. அவர்கள் தற்போது இரவில் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்திற்கு வந்துள்ளோம்.காரணம் பெண்கள் உணவு எடுத்துக் கொள்வது குறித்த கவனத்தில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் அவர்களுக்கு சரிவிகித உணவு கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பின்னோட்ட கருத்தினை வழங்கினார்கள்.
பின்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிறுமிகள் மற்றும் பெண்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். முதலில் பெரிய வட்டம் ஒன்று போட்டு அதில் இளைஞர்கள் அனைவரையும் ஒன்றாக இணைந்து வட்டமாக நிற்க சொன்னார். பின்பே வட்டத்தில் நிற்கும் இளைஞர்களை ஒன்று இரண்டு என்ற எண்ணை ஒவ்வொருவராக மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது அனைவரும் சொல்லி முடித்தனர். ஒன்று என்று சொன்னவர்கள் அனைவரையும் ஒரு குழுக்களாக பிரித்தார், இரண்டு என்று சொன்னவர்களை ஒரு குழுக்களாக பிரித்தார். ஒன்று என்ற குழு தங்களை ஆண்களாக கருதி கொள்ள வேண்டும் இரண்டு என்ற குழு தங்களை பெண்களாக கருதி கொள்ள வேண்டும் என்று கூறினார். இப்போது நாம் ஒரு விளையாட்டினை தொடங்க போகிறோம், அதில் பெண்கள் மட்டும் நான் சொல்லும் போது ஒவ்வொரு கட்டுப்பாடு சொல்வேன் அந்த கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் செயல்பட வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
முதல் சுற்று துவங்கியது அப்போது பெண்கள் மட்டும் ஒரு கையினை மேலே தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் நான் நில் என்ற சொன்ன பிறகு சிறிய கட்டத்திற்குள் வந்து நிற்க வேண்டும் என்று கூறினார். அனைவரும் ஓடினார்கள் விளையாட்டுத் துவங்கியது பிறகு ஒவ்வொரு சுற்றிலும் பெண்களுக்கு ஒவ்வொரு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது விளையாட்டின் முடிவில் 7 இளைஞர்கள் மட்டும் வட்டத்தின் நடுவில் இருந்தனர் அவர்களிடம் இதில் யார் பெண் நபராக விளையாடியவர் ஆண் நபராக விளையாடியவர்கள் யார் என்று கேட்டபோது ஒரு பெண் ஆறு ஆண்கள் இருந்தனர் அவர்களிடம் இந்த விளையாட்டு எப்படி இருந்தது என்ன உணர்ந்தீர்கள் என்று கருத்துக்கள் ஒருங்கிணைப்பாளர் கேட்டனர். அப்போது அவர்கள் பெண்களாகிய எங்களுக்கு ஒரு சில விதிமுறைகள் நீங்கள் விதிக்காமல் இருந்திருந்தால் நாங்களும் அவர்களுக்கு நிகராக விளையாட்டில் பங்கேற்க முடிந்திருக்கும் என்று உணர்ந்தேன் பெண்களாகிய எங்களுக்கு மட்டும் நீங்கள் கட்டுப்பாடுகள் விதித்தீர்கள் அவர்களை சுதந்திரமாக விளையாட விட்டீர்கள் அதனால் தான் எங்களால் விளையாட்டில் வெற்றி பெற இயலவில்லை என்று கூறினார்கள். பின்பு ஒருங்கிணைப்பாளர் இந்த விளையாட்டு நியாயமானதா ஆம் என்றால் எப்படி இல்லை என்றால் ஏன் என்ற கேள்வியும் இந்த விளையாட்டில் தோற்றவர்கள் யார் என்று கேட்டபோது பெண்கள் என்றும் இந்த விதிகளை உருவாக்கியது யார் மனிதர்கள் தான் என்றும் இத்தகைய ஒரு விளையாட்டில் பாகுபாடு இருக்கும்போது அதை ஏன் எதிர்த்து கேட்கவில்லை என்று கேட்டபோது நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் செய்தோம். என்றும் தோல்வி அடைந்தவர்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்று கேட்டபோது அவர்களை மின்னோட்ட கருத்துக்களை வழங்கினார்கள்.
இந்த வகையான விளையாட்டு நமது சமுதாயத்தில் இருக்கிறதா யார் விளையாடுகிறார்கள் என்று கேட்டபோது நம்முடைய பெற்றோர்கள் என்றும் விளையாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு பெண்கள் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கேட்டபோது பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளார்கள் என்பதை தெரியவந்தது என்றும் அத்தகைய ஒரு விளையாட்டை விளையாடுவதில் யார் பொறுப்பு ஏற்கிறார்கள் என்று கேட்டபோது ஆண்களும் பெண்களும் இருவருமே என்று கூறினார்கள் இந்த விளையாட்டின் விதிகளை யாரால் மாற்ற முடியும் என்று கேட்டபோது நம்மால் மாற்ற முடியும் என்றும் கூறினார்கள். பிறகு ஒருங்கிணைப்பாளர் இத்தகைய பாகுபாட்டை முன் வைக்கும் விதிகள் சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை இவை இயல்பான விதிகள் போன்று தோன்றும் ஆனால் இவை அனைத்தும் பெண்களை கட்டுப்படுத்தும் வகையில் தான் உள்ளது எனவே இதனை நாம் மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது நமது பெற்றோர்களிடம் புரிதலை ஏற்படுத்தி நாம் முதலில் மனமாற்றம் ஏற்பட்டு பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் உரிமைகளையும் வழங்க வேண்டும் அப்போதுதான் நமது சமூகத்தில் பெண்களால் முன்னேற்றம் அடைய முடியும் என்றும் கருத்துக்களை வழங்கினார்.









Leave a comment