29 1 2021 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பேட்டை கிராமத்தில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 28 நபர்கள் கலந்து கொண்டனர் .
அம்மன்பேட்டை புது கோவிலுக்கு சென்று கூட்டத்தை ஒருங்கிணைத்தோம். அமர்வு முன்னுரிமை மற்றும் நிர்ப்பந்தம் சிறுமிகள் மற்றும் பெண்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த என்ற தலைப்பில் ஆலோசித்தும் ஏற்கனவே இந்த இரு அமர்வையும் பேசப்பட்டதால் அவர்களின் இருந்து கருத்துகளையும் குறிப்புகளும் கேட்டறிந்தேன்.
பின்னர் அமர்வு 8 கல்வி பயில வசதி மற்றும் ஒரு உரிமை கல்வி என்ற தலைப்பில் கோவிலில் இரண்டு குழுக்கள் பிரித்து பேசப்பட்டது. அதில் ஒவ்வொரு குழுவிடம் ஐந்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் கல்வி உரிமையை யார் தருகிறார்கள் ,கல்விக்கான உரிமையை சட்டம் ஏதாவது உள்ளதா கல்விக்கான உரிமை சட்டம் எப்போது இயற்றப்பட்டது கல்விக்கான உரிமையை உறுதி செய்வதில் அரசின் பொறுப்புகளும் கடமைகள் என்னென்ன கல்விக்கான வயதுவரம்பு என்னவென்று கேட்டேன் என்று பல்வேறு வினாக்களை அவரிடம் நான் எடுத்து வைத்தேன். அதில் ஒருவர் அம்பேத்கர் தான் என்று கூறினார் இன்னொருவர் காமராசர் என்று கூறினார் ஒருவர் அரசு பள்ளியில் விளம்பரம் செய்யப்பட்டு அதில் கல்வி உரிமைச் சட்டம் 2006 அன்று எழுதப்பட்டிருக்கும் என்று கூறினார் சிலர் கர்மவீரர் காமராசர் என்று கூறினார்கள் சிலர் பெற்றோர்கள் என்று கூறினார்கள். பின்னர் ஒவ்வொருவராக அவர்கள் சொன்ன கேள்விக்கு விடைகளை கேட்டறிந்தன். சிலர் அம்பேத்கர் தான் சட்டத்தை இயற்றினார் அதனால் அவர் தான் என்று கூறினார்கள் சிலர் கர்மவீரர் காமராசர் அவர்கள் கல்விக்கு கண் கொடுத்தவர் உணவு அளித்தவர் சீருடை வழங்கியவர் எனவே அவர்தான் என்றும் கூறினார் சிலர் எனது பெற்றோர்கள் என்றும் கூறினார்கள் பின்பு நான் கல்வி பெறுவதற்காக உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அதன் வழிகாட்டுதல்படி தான் செயல்படுகிறது என்று அவர்கள் புரிதல் ஏற்படுத்தினேன். கல்வி என்பது சட்டமாக இயற்றப்பட்டு 2010 ஆம் ஆண்டு அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறினேன். அதேபோல் சிலர் கல்விக்கு வயது உண்டு என்று கூறினார்கள், ஆனால் கல்விக்கு வயது இல்லை ஒரு மனிதன் எப்போது வேண்டுமென்றால் கல்வியை கற்றுக் கொள்ளலாம். கல்வி என்பது படிப்பு மட்டுமல்ல புத்தகங்களை வாசிப்பது, புத்தகங்களை எழுதுவது, புத்தகங்களை உருவாக்குவது என்று பல்வேறு படிப்புகளையும் ஆக்கப்பூர்வமான செயல்களையும் வடிவமைக்கலாம் எனவே கல்விக்கு எல்லையே இல்லை என்று கூறினேன். அதேபோல் கல்விக்கு பெண்களுக்கு எவ்வாறு ஒடுக்கு முறைகளும் அடக்கு முறைகளும் உள்ளது என்று கேட்டேன். அதில் ஆண்கள் எங்கெல்லாம் கல்வி கற்கலாம் என்று கேட்டதற்கு ஆண்கள் வெளியூரில் தங்கி படிக்கலாம் வெளிநாட்டில் படிக்கலாம் விரும்பிய கல்வியை வீட்டில் படிக்க வைப்பார்கள் உறவு வீட்டில் தங்கி படிப்பார்கள் நகரத்துக்கு சென்று படிப்பார்கள் என்று பல்வேறு சாதகமான கேள்வி ஆண்களுக்கான கேள்விகளை கூறினார்கள். ஆனால் பெண்களுக்கு குறிப்பிட்ட வயது வரை படிக்க வைப்பார்கள் பெண் வயது வந்து விட்டவுடன் கல்வி போதும் என்று சிலர் நிறுத்தி விடுவார்கள் அது மட்டுமல்லாமல் பெண்ணே அதிக அளவில் பணம் கட்டி படிக்க வைப்பதில் தடை உள்ளது காரணம் அவள் இன்னொரு வீட்டிற்கு செல்வதால் அவளை ஏன் நாம் இவ்வளவு பணம் கொடுத்து படிக்க வேண்டும் என்று கிராமப்புறங்களில் இன்னும் எண்ணம் உள்ளது. சிலர் அடுப்பு பெண்களுக்கு படிப்பு எண் என்றும் கூறுகின்ற அளவிற்கு இன்னும் சில கிராமங்களில் இருக்கிறார்கள் சில பெற்றோர்கள் வருமானத்திற்காகவும் படித்து வைப்பதற்கு செலவாகும் என்பதற்காகவும் சில மாணவிகளை படிக்க வைப்பதில்லை இது போல் நிறைய விஷயங்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இந்திய அரசியல் சட்டம் இலவச கட்டாயக் கல்வியும் 6 முதல் 14 வயதுக்கு அனைத்து குழந்தை இலவச கட்டாய கல்வி படிக்க வேண்டும் என்று இந்த உரிமையை பெறுவதில் குடும்பமோ சமுதாயமோ அல்லது அரசாங்கமோ யாராக இருந்தாலும் எந்த வித தடையும் விதிக்கக்கூடாது என்று அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கையெழுத்து விடுதலைவருக்கும் அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதை இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது என்று நான் அவருக்கு எடுத்துரைத்து கூறினேன் மேலும் நமது வீட்டில் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் நாம் வரும் சந்ததிகளை படிக்க வேண்டும் பெண்ணையும் ஆணையும் சரிசம படித்தால் மட்டுமே நம் குடும்பமும் வளரும் நம் சமுதாயமும் வளரும். எனவே அனைவருக்கும் கல்வி கற்பதற்கான நடவடிக்கை நாம் பெற்றோரிடம் எடுத்துரைக்க வேண்டும் தன் தங்கை மற்றும் தனது அக்காவை படிக்க வைக்க நாம் முன் உணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறுதியாக நான் அவர்களுக்கு எடுத்துரைத்தேன் பின்னர் சிலர் ஆம் சார் நிறைய வீட்டில் ஆங்கிலம் மட்டுமே அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள் பெண்களை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதேபோல் அரசு பள்ளியில் பெண்களை படிக்க வைக்கிறார்கள் ஆண் பிள்ளையை தனியார் பள்ளியில் படிக்க வைப்பது போன்ற வசதி உடைய வாய்ப்பை ஏற்படுத்தி ஆணை படிக்க வைக்க எனவே இனிமேல் நாங்கள் எங்கள் வீட்டில் எங்கள் தங்கையை படிக்க வைத்து விடுவோம் அதுவும் சரிசமமாக எங்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நான் கேட்பேன் என்று சிலர் அதற்கு கூறினார்கள் கல்விக்கான சட்டங்களும் திட்டங்களும் அதிகமாக உள்ளது எனது நமது பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நாம் எடுத்துரைக்க வேண்டும் ஆண் பெண் பாகுபாடு இன்றி அனைவரும் படிக்க வேண்டும் அனைவரும் அரசு பணியில் செல்ல வேண்டும் தன்னுடைய அறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் பாலின சமத்துடன் நாம் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு இறுதியாக நான் எடுத்துரைத்து முடித்துக் கொண்டேன்.









Leave a comment