29.1.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், ஜானகிபுரம் கிராம அங்கன்வாடி மையத்தில் இளைஞர்களை ஆண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் பிறகு இளைஞர்களிடம் சென்ற மாதம் நடத்திய அமர்வு 8 கல்வி பயில வசதி மற்றும் கல்வி பெற வசதி மற்றும் ஒரு உரிமையாக கல்வி நடத்தப்பட்டது. அதனை நினைவூட்டல் செய்து அதன் பின்னோட்டம் கேட்கப்பட்டது. பின்பு வசவு மொழி குறித்து இளைஞர்களிடம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சமுதாயத்தில் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்பதை ஒவ்வொருவராக வந்து எழுதுமாறு கூறப்பட்டது. பிறகு அந்த இழிவு படுத்தும் வார்த்தையை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இளைஞர்கள் மத்தியில் கேட்கப்பட்டது அவர்களும் அவர்களது தனிப்பட்ட கருத்துக்களை ஒவ்வொருவரும் கூறினார்கள் அதில் இரண்டு நபர் பெண்களை இழிவு படுத்துவது சரி என்று கூறினர் அவர்களிடம் புரிதலை ஏற்படுத்தப்பட்டது. பிறகு அவர்கள் விடுபட்ட தகவலை எடுத்துக் கூறி பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதால் பெண்கள் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துக் கூறப்பட்டது. சமூகத்தில் பெண்களை புண்படுத்தும் வகையில் ஆண்கள் வசுவு மொழி சொற்களை ஏராளமாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் ஆண்களை வசுவுமொழி கொண்டு எந்த சொற்களையும் பயன்படுத்துவதில்லை இதுபோன்று சொற்களை பயன்படுத்துவது தடுத்து நிறுத்துவது இளைஞர்களின் பொறுப்பாகும். நாம் சமூகத்தில் நிலவுகின்ற ஆண் பெண் என பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக மாற்றி அமைக்க வேண்டும். பெண்களுக்கான ஏற்படுகின்ற குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் 2005 குறித்த அந்த சட்டம் எப்ப கொண்டுவரப்பட்டது நடைமுறைப்படுத்திய ஆண்டு என்ன என்று இளைஞர்கள் கேக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தெரியவில்லை என்று கூறினார் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் என்று கூறினார்கள்.அதன் பின்பு குடும்ப வன்முறை சட்டம் 2005 கொண்டுவரப்பட்டது அதை நடைமுறைப்படுத்திய ஆண்டு அக்டோபர் 26 2006 கொண்டுவரப்பட்டது. பெண்கள் கணவர் மற்றும் உறவினரால் வன்முறையில் பாதிக்கிறார்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை புகார் கொடுப்பதற்கு பாதுகாப்பு அலுவலர் ஒருங்கிணைந்த சேவை மையம் நீதிமன்றம் காவல் நிலையம் தன்னார்வலர் அமைப்பு சென்று புகார் கொடுக்கலாம் என்று பேசப்பட்டது . கிராமத்தில் பெண்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டால் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் அங்கன்வாடி ஆசிரியர்கள் இவர்களும் புகார் கொடுக்கலாம் என்று அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகளையும் பெண்களுக்கான உரிமைகளையும் எடுத்து கூறப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் சமத்துவத்தோடு செயல்பட வேண்டும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட முதல் மூல காரணம் பெற்றோர்களால் ஏனென்றால் குழந்தைகளை சரியான முறையில் கவனிக்காமல் இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவதிப்படுகின்றனர் அதனால் உங்கள் வீட்டில் அல்லது உறவினர் கிராமத்தில் நீங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினமும் பேச வேண்டும் அவர்கள் தொலைபேசி பயன்படுத்த போது கண்காணிக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தி குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் உணவுகளில் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் சமமாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது பெண்களுக்கான பாதுகாப்பு எண் 18 1 புரிதலை ஏற்படுத்தப்பட்டது பின்பு மாதம் ஒரு சட்டம் குறித்து பேசலாம் என்று இளைஞர்களிடம் பேசப்பட்டது அதற்கு அவர்கள் சரி என்று கூறினார் அதன் பின்பு கூட்டம் நிறைவு பெற்றது.இதில் 27 நபர்கள் கலந்து கொண்டார்கள் .






Leave a comment