உலக மகளிர் தினத்தில் உறுதிமொழி
புதுச்சேரி – மார்ச் 8, புதுவை அதேகொம் பின்னகத்தில் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ,அதேகொம் பின்னகம் & பெண் ஒளி கூடம் இணைந்து ஒருங்கிணைத்த மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சமூகம் மற்றும் பணியிடங்களில் பெண்களை மதிக்கவும், ஆதரிக்கவும், அதிகாரம் அளிக்கவும் ” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் “நான் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை நிறுத்துவதாக உறுதியளிக்கிறேன்” போன்ற 7 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.
அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர் ப .லலிதாம்பாள் “பெண்ணியம் மட்டும் பேசும் பெண்களுக்கு ஏதிராக பாலியல் வன்முறை , பாலியல் துன்பங்கள் வீட்டிலும் , பணி செய்கிற இடங்களிலும் நடக்கிறது. அவற்றை எப்படி விழிப்புணர்வு அளித்து , சட்ட ரீதியாக ஆலோசனை வழங்குவது , நிவாரண நடவடிக்கை மேற்கொள்வது அவசியமானது . இந்த தினம் ஐநா தலைப்பின் படி அனைத்து பெண்களையும் அரவணைத்து அதரவு அளித்து அவர்களை பாதுகாப்பகவும் மரியாதையாகவும் நடத்தப்படவேண்டும். நாமும் நம்முடைய பகுதியில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய குடும்ப வன்முறை , பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். மேலும் அவர் பேசுகையில் “இந்த உலகிற்கு, பெண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். மேடைப் பேச்சுகளில் மட்டுமே, பெண்மையின் மகத்துவம் பெரிதாகப் பேசப்படுகிறது. தன் மகள், விளையாட்டுப் போட்டியில் ஜெயித்துவிட்டாள் என்று ஊரெல்லாம் பெருமை பேசி மார்தட்டிக்கொள்ளும் ஒரு தந்தை, அவரது மனைவியைக் கொண்டாட ஏன் மறந்து விடுகிறார்? யோசித்துப் பார்த்தால், குடும்பத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சமூகத்தில் எதுவும் மாற்ற முடியாது. முதலில் நாம் மாறுவோம். பிறகு மாற்றத்தை ஏற்படுத்துவோம்! அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! என அவர் குறிப்பிட்டார்.
வழக்குறிஞர் திரு . சீனு ,.பெருமாள் பேசுகையில் , பெண்கள் தங்களின் உரிமைக்காக சங்கங்களாக உருவாகவேண்டும். அப்போதுதான் உங்களுடைய பிரச்சனைகளை சரி செய்ய முடியும். மேலும், இன்று நம் தேவைகளை இன்டர்நெட் வழியாக பூர்த்தி செய்யும்போது சரியான முறையில் செய்யவேண்டும். எந்த சேவையை நாம் அங்கு சென்று நிறைவேற்றுவது, அதனால் ஏற்படும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துக்கூறவேண்டும். ஆண் குழந்தைகளுக்கு பாலின சமத்துவத்தை வளர்க்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார், சர்வதேச தங்கப் பதக்கம் வென்ற பெண்களுக்கான எளிய தற்காப்பு நிறுவனர் திரு .மோகன், பேசுகையில், தற்காப்பு கலை பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. தற்காப்பு கலை வழியாக பெண்கள் தங்களை உடல் ரீதியாக மனோரீதியாகவும் பாதுகாத்து கொள்ளமுடியம். தற்காப்பு கலைகளை பெண்குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும் என கூறினார்.
இறுதியாக திரு முகமது உஸ்மான் நன்றி கூறினார். முன்னதாக அதேகொம் பின்னக குடும்ப நல ஆலோசகர் திருமிகு. சாந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். தையல் ஆசிரியர் திருமிகு.லூர்து மேரி, கள ஒருங்கிணைப்பாளர் திருமிகு. தேவகி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இந்த உலக மகளிர் தினத்தில் 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்..























Leave a comment