அதேகொம் பின்னகம், புதுச்சேரி, அன்னை மீனாம்பாள் கிராம பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை, கடலூர், மக்கள் குடியரசு இயக்கம், கடலூர் மாவட்டம், பெண்கள் பகுத்தறிவு பாராளுமன்ற இயக்கம், கடலூர் மாவட்டம் ஆகியவை ஒருங்கிணைக்கும் சர்வதேச உலக மகளிர் தினம்-2023 தியாகு நகர் சமுதாய நலக்கூடத்தில் 15.03.2023 அன்றுநடைப்பெற்றது. பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பெண்களுக்கு கோல போட்டி, கபடி, மியூசிக் ஷேர், ஓட்டப்பந்தயம் அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைக்கப்பட்டது.
மதியம்2:30 மணி அளவில் சர்வதேச உலக மகளிர் தினம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.திருமிகு மகேஸ்வரி வழி நடத்துபவர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மகளிர் தின அறிமுக உரை திருமிகு ப. லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அதேகொம் பின்னகம், அவர்கள் பேசுகையில் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். பாலின சமத்துவத்தோடு செயல்பட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் கரும்பொருளாக பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும், மகளிர் தின நிகழ்ச்சியினை முதலில் கிளாரா ஜெர்க்கின் என்ற சமூகப் போராளி அவர்கள் தான் மகளிர் தின நிகழ்ச்சியினை கொண்டாடினர். மகளிர் காண உரிமைக்காகவும் மகளிருக்கான தின கூலியினை சமமாக கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் ஜாதி மதம் இனம் பாகுபாடு இல்லாமல் பெண்களை அரவணைக்க வேண்டும் என்றும் கொண்டாடப்பட்டது என்பதனை நினைவு கூறினார். பின்பு சட்டம் குறித்து விளக்கினார், சட்டத்தில் ஆண்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அது நடைமுறையில் உள்ளது. ஆனால் செயல்பாட்டில் சரியாக இல்லை என்பதனை எடுத்துக் கூறினார். பின்பு சமூக குழு உறுப்பினர்கள் சமூகப் பணியில் ஆர்வமாக இருக்க வேண்டும் சமூகப்பணி மிகவும் மகத்துவமானது அதனை செய்வதால் எந்த விதமான செயல்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. சமூகப் பணி செய்பவர்கள் துணிவாகவும் தெளிவான முடிவு எடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பணியினை சிறப்பாக செய்ய முடியும் வரும் காலத்தில் சமூக குழு உறுப்பினர்கள் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்
திருமிகு மகேஸ்வரி ஆய்வாளர் அனைத்து மகளிர் காவல் நிலையம் கடலூர் அவர்கள் பேசுகையில் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து என்னை தெரிவித்து பெண்கள் தேவையில்லாத வார்த்தைகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என்றும் இன்னும் பெண்களுக்கு முழுமையான உரிமை கொடுக்கப்படவில்லை 50% தான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கல்வித்துறை மருத்துவத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கவில்லை 33 சதவீதம் தான் பெண்களுக்கு உரிமை உள்ளது இது மோசமானது அல்லவா என்று எடுத்துக் கூறினார். சட்டம் குறித்து ஆண் பெண் இருவரையும் கண்டிப்புடன் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என்று விளக்கினார். மானிடரா பிறப்பது அரிது அதிலும் பெண்ணாக பிறப்பது மிகவும் அரிது என்று விளக்கினார்.
திரு ஸ்ரீதரன் மருத்துவர் அரசு தலைமை மருத்துவமனை கடலூர் அவர்கள் பேசுவதில் பெண்களுக்கான முன்னேற்றம் என்பது பெண்களிடம் தான் உள்ளது ஏனென்றால் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அந்த பெண்ணை குறை சொல்வது முதலில் பெண்தான் ஒரு படி பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் அதனை இரண்டு படியாக குறைப்பது பெண்கள் தான் நீங்களே அதை கண்கூடாக பார்த்திருக்க முடியும். எனவே நாம் யாருக்கும் தீமை நினைக்க கூடாது வளரும் பெண்களை வளருவதற்கு ஊக்கிவிக்க வேண்டும் என்று கூறினார் மகளிர் தின வாழ்த்துக்களை பெண்கள் கூறினார்
திருமிகு செல்வ பிரியா வழக்கறிஞர் அவர்கள் பேசுகையில் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள். ஆண்கள் உடல் அளவில் தான் வலிமையானவர்கள் எனவே பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதனை விளக்கினார். நீங்கள் அனைவரும் சமூகப் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளீர்கள் ஆனால் அதில் பயன்களை எதிர்பார்க்கக் கூடாது ஒரு தேவையாக செய்ய வேண்டும் என்றும் விளக்கினார். பெண்களுக்கு பெண்களை உதவி செய்ய வேண்டும் நமக்கு மட்டும் நாம் உதவி செய்வது உதவி செய்து கொள்வது மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.
திருமிகு அமுதா ஒருங்கிணைந்த சேவை மையம் ஆலோசகர் அவர்கள் பேசுவதில் ஒருங்கிணைந்த மையம் செயல்பாடுகள் குறித்து விளக்கி அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்
திரு காளிதாஸ் சைல்டு லைன் அணி உறுப்பினர் அவர்கள் பேசுவதில் ஆளுமை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை என்று விளக்கினார். ஆணாதிக்கம் என்ற பிடியில் இன்னும் பெண்கள் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று விளக்கினார் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பதனை விளக்கினார் .பெண்களின் முழுமையான விடுதலை என்பது கல்வி கற்பதனால் மட்டுமே உண்டாகிறது என்று விளக்கி அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறினார்.
பணி செய்யும் கிராமத்தில் சிறப்பு தலைவிகளை தேர்வு செய்து சிறப்பு அழைப்பாளர்கள் கையால் மரியாதை செய்யப்பட்டது. பிறகு சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் ஷீல்டு வழங்கி மரியாதை செய்யப்பட்டது. பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பரிசு பொருள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் திருமிகு. தமிழ்ச்செல்வி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்





























Leave a comment