அதே கோம் பின்னகம், மனிதநேய மறுவாழ்வு குழுமம் மற்றும் தி கார்டியன் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளை, நம்பிக்கை கதிர் சொசைட்டி இணைந்து ஒருங்கிணைந்த சமூக குழுக்களுக்கான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் மகளிர் தின நிகழ்ச்சி ஒத்த வாடை தெரு வசந்தபுரம் லாஸ்பேட் தி கார்டியன் ஏஞ்சல்ஸ் அறக்கட்டளையில் 18.03.2023 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமிகு நிர்மலா இயக்குனர் தி கார்டியன் டிரஸ்ட் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் திருமிகு பத்மாவதி குடும்ப ஆலோசகர் கூட்டுக் குரல் அலுவலகம் அவர்கள் நோக்க உரையில் மைத்திரி அமைப்பு பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிர்த்துப் பேசுவதற்கும் அவர்களின் உரிமையை கோருவதற்கும் நீதி தேடுவதற்கும் நேர்மறையான மற்றும் நீடித்த மாற்றத்திற்கான பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியில் எட்டு மாவட்டங்களில் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும் புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சேவை வழங்கினராக அங்கீகாரம் பெற்று ஆலோசனை மையம் பெண் ஒளிக்கூடம் இயங்கி வருகின்றன. மேலும் குடும்ப வன்முறை பாலியல் ரீதியான வன்முறையில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சட்ட உதவி, குடும்ப ஆலோசனை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தல் மருத்துவ உதவி மனநிலை ஆலோசனை பயிற்சிகள் அளித்து வருகிறோம். கடந்த ஆண்டு 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் கருப்பொருளான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணியத்திற்காக ஒன்றுபடுவோம் என்ற தலைப்பில் 16 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி கூறப்பட்டன. மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக அதே கோம் பின்னகம் செயல்படுகிறது.பாலியல் வன்முறை என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்படுகிறது. வளர் இளம் பெண்கள் இப்பாலியல் வன்முறையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருந்து அவர்களை பாதிப்பிலிருந்து வெளிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுப்பது சமூகக் குழுக்கள் ஆகிய நம்மில் ஒவ்வொருவரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். உங்கள் பகுதியில் உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு இவ்வாறு பிரச்சனைகள ஏற்பட்டால் அதே கோம் தொடர்பு கொண்டு பின்னகத்தின் கூறலாம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று கூறினார். மேலும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சுவரொட்டி பிரசுரம் வழங்கப்பட்டன
திருமிகு எலிசபெத் தன்னம்பிக்கை கலைக்குழு அவர்கள் பேசுகையில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் மேலும் பெண்கள் தன்னம்பிக்கையுடனும் லட்சியத்துடனும் உறுதியுடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் பெண்களை பெண்களே அவமதித்து பேசுவதை ஒவ்வொரு பெண்களும் மாற்றிக் கொள்ள வேண்டும் பங்கேற்பாளர்களிடம் பெண்களைப் பற்றி காலத்தில் ஏற்படுத்திய பழ மொழிகளைப் பற்றி கேள்வி எழுப்பினார் பெண் குழந்தைகளுக்கு தாய்மார்கள் குழந்தைகளின் உடல் உறுப்புகளை பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் மேலும் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை உறவினர்களாகட்டும் தொடுவது அனுமதிப்பது தவறு என்று உணர்த்த வேண்டும் பெண்களைப் போற்றும் விதத்தில் பாடல் பாடினார்.
திருமிகு ரோஸ்லின் ஷீலா மனிதநேய மறுவாழ்வு குடும்பத்தின் இயக்குனர் அவர்கள் பேசுகையில் பெண்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் மேலும் உதவிகள் பற்றி எடுத்துக் கூறினார் குடும்ப வன்முறை என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு அன்றாட வாழ்க்கையில் நடந்து வருகின்றன பெண்கள் தைரியமாக வெளியே கூற முன் வருவதில்லை அதனால் பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று கூறினார்.
திருமிகு நிர்மலா கார்டியன் ஏஞ்சல் அறக்கட்டளையின் இயக்குனர் கொரோனா காலகட்டத்தில் இருந்து பெண்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவளித்து வருவதாகவும் மேலும் இந்நிகழ்ச்சி சமூக குழுக்களாகிய பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தொடர்ந்து எங்களுடன் இணைந்து இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் மேலும் நம்பிக்கை கதிர் மத்திய அரசால் பதிவு பெற்ற சங்கத்தில் 60 பெண்கள் உறுப்பினராக உள்ளனர் அவர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சி நடத்தும் போது துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அனைவரும் உறுதிமொழியுடன் நிகழ்ச்சி முடிக்கப்பட்டன










Leave a comment