மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அதேகோம் பின்னகம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா


விழுப்புரம்-மார்ச் 23
விழுப்புரம் மாவட்ட மைத்ரி தேசிய மகளிர் கூட்டமைப்பு,அதேகோம் பின்னகம் மற்றும் மக்கள் கல்வி அறக்கட்டளை இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியை பொய்யப்பாக்கம் ஊராட்சியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில், மக்கள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திருமிகு. அன்பரசி வரவேற்றுப் பேசினார். அதேகோம் பின்னகம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆர்த்திஎப்சிபா பேசுகையில், அதேகோம் பின்னகத்தின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கி, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார். மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆலோசனை மற்றும் சட்ட உதவிக்காக எங்களை அனுகலாம் என குறிப்பிட்டார்.
திரு.ராமச்சந்திரன் நேரு யுகந்திர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இந்த சிறப்பு நாளில் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, போக்ஸோ சட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதித்தார். மேலும் நேரு யுகந்திர அமைப்பினால் நடத்தப்படும் அழகுக்கலை, தையல், மெக்கானிக்கல் போன்ற 80 திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கான பயிற்சிகளை விளக்கினார், இந்த வகையான பயிற்சி வாய்ப்புகளை பெண்கள் பயன்படுத்தவும் என குறிப்பிட்டார் ..
திரு.லட்சுமிபதி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு அளித்து, மதுபிரியர்களின் குடும்ப சூழ்நிலையை விளக்கினார். இந்த குடும்ப சூழ்நிலையால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் சில குழந்தை திருமண வழக்குகள், போக்சோ வழக்குகள் பற்றி எடுத்துரைத்தார் இறுதியாக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பொய்யப்பாக்கம் ஊராட்சிப் பள்ளித் தலைமையாசிரியர் கூறியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்போன் பயன்பாட்டில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம், பெற்றோர்கள் தயவு செய்து செல்போன்களை வீட்டில் குழந்தைகளின் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.பெற்றோர் தவறுகளைத் தடுக்கலாம் என்று கூறி மகளிர் தினம் வாழ்த்துக்கள் கூறினார்.
தாவோ அமைப்பைச் சேர்ந்த திரு.வில்சன் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து, பெண்கள் இல்லை என்றாள் உலகில் பெரிய மனிதர்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார், அதாவது இயேசு கிறிஸ்து , புத்தர், உலக தலைவர்கள் அனைவரும் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து உருவானவர்கள் எனவே பெண்கள் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து இல்லை, புத்தர் இல்லை, உலக தலைவர்கள் இல்லை என குறிப்பிட்டார், ஆகையால் உலகில் பெண்கள் மிகவும் மதிப்புமிக்கவர்கள் என்று கூறினார்… மேலும் அவர் மாலையில் இலவச கல்வி வகுப்புகள் பற்றியும் தங்கள் சேவையை விவாதித்தார்..
திருமிகு.ஜெயபிரதா, WEED அறக்கட்டளையின் நிறுவனர் SHG குழு செயல்பாடுகள் குறித்து விவாதித்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில், சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை, ஆதரவு மற்றும் அதிகாரம், தண்ணீரை சேமித்தல் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாத்தல் குறித்து பெண்களால் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.ராமச்சந்திரன் நேருயுகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வில்சன் தாவோ அமைப்பு, WEED அறக்கட்டளையின் நிறுவனர் திருமகு.ஜெயபிரதா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் திரு.லட்சுமிபதி, அதேகோம் பின்னகம் ஒருங்கிணைப்பாளர் திருமகு.ஆர்த்திஎப்சிபா,1 தலைமை ஆசிரியர். , மற்றும் பங்கேற்பாளர்கள் 30 கிராம பெண்கள், 10 பெண் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் 8 சுய உதவிக்குழு உறுப்பினர்கள், 2 வார்டு உறுப்பினர்கள், 1 அங்கன்வாடி உதவியாளர் கலந்து கொண்டனர்.
இறுதியாக திருமகு. ஆர்த்திஎப்சிபா,அதேகோம் பின்னக ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை ஆற்றினார்.

Leave a comment