26 3/2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மன் பட்டேல் கிராமத்தில், அமர்வு 9 வசவு மொழி எப்படி பெண்களை வசம்பு மொழியால் திட்டுவது அல்லது பாலியல் வார்த்தையை பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்கு முன்னோட்டமாக பேசப்பட்டது. மேலும் நேற்று எடுக்கப்பட்ட தலைப்பு வன்முறையின் வகைகள் பெண்களை எப்படி எல்லாம் வன்முறைய வார்த்தையாலும் பாலியல் வார்த்தையாலும் பொறுமையிலும் பேசுவது பற்றி எடுக்கப்பட்டது. இதற்கு இரண்டு குழுக்களாக பிரித்து அவரிடம் சாட் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் உங்களுடைய வன்முறைகள் எவ்வாறெல்லாம் நீங்கள் சொற்களை பயன்படுத்துகிறார்கள் என்பது எழுதவும் என்று சொன்னவுடன் பல நபர்கள் புல ரீதியான மன ரீதியான மற்றும் பணி சிறக்க இடத்தில் பல்வேறு இடத்தில் அவர்களுக்கு வன்முறைகள் ஏற்படுகிறது என்று கூறினார்கள. பின்னால் இந்த வன்முறை யாரால் ஏற்படுகிறது என்பது என்று நான் கேட்டேன் அதற்கு ஆண்களால் தான் ஏற்படுகிறது அது ஒன்று ஒரு சிலர் பெண்களும் சரியாக நடந்து கொள்வதில்லை என்று கூறினார்கள். அதில் நான் அவர்களுக்கு எடுத்துரைத்தன் பெண்கள் நம்மளுடைய வீட்டில் எவ்வாறு நாம் பார்க்கிறோமோ அவ்வாறுதான் நாம் பார்க்க வேண்டும். மேலும் பெண்களுக்கு பல பிரச்சனைகளும் வருகிறது குடும்ப வன்முறை பாலியல் வன்முறை வெளியில் உள்ள நபர்களால் தொல்லை பேருந்தில் தொல்லை என நாம் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே அவர்களை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும் என்பதை அவர்களுக்கு நான் உணர்த்தினேன். பின்னர் அனைத்து உறுப்பினர்களும் நான் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்தினை பதிவு செய்யுமாறு கேட்டேன் அவர்கள் ஒவ்வொரு வன்முறை பற்றி அவர்கள் பேசினார்கள். இறுதியாக நான் வன்முறை என்பது அவர்களுக்கு பலவகையில் வகையில் ஏற்கனவே உங்களுக்கு நான் தெரிவித்துள்ளேன். எனவே தாங்கள் பெண்களுக்கு வன்முறை ஏற்படாத அளவிற்கு தங்கள் வீட்டில் இருக்கும் அம்மா தங்கை பிள்ளை அண்ணி அல்லது உங்களுடைய மனைவி ஆகியவரிடம் நீங்கள் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்றவாறு விருப்பத்திற்கு ஏற்றவர் நாம் நடந்து கொள்வது மிகவும் அவசியம் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்



Leave a comment