26-3-2023 அன்று நத்தப்பட்டு கிராமத்தில் இளைஞர்கள் பயிற்சி நடைபெற்றதுஇப்பயிற்சியில் 17 நபர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் தலைப்பு பாலியல் வன்முறைஇளைஞர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பயிற்சி நடைபெற்ற விவரத்தினை நினைவூட்டல் செய்தார். பின்பு பாலியல் வன்முறை என்றால் என்ன என்று நீங்கள் நாடகம் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார் அதற்கு இளைஞர்கள் 20 நிமிடம் நேரம் கேட்டனர் பின்பு 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது நாடகத்தினை நிகழ்த்தினார்கள் அதில் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் வன்முறை பள்ளியில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை. பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது ஏற்படும் பாலியல் வன்முறை கணவன் மனைவிக்கு ஏற்படுத்தும் பாலியல் வன்முறை இவைகளை ஒரு நாடகமாக அரங்கேற்றம் செய்தனர் அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அவர்களை கைக்கு தட்டி உற்சாகப்படுத்தப்பட்டது பிறகு இது போன்ற பாலியல் வன்முறையினை எப்படி தடுப்பது அதில் இளைஞர்களின் பங்களிப்பு என்ன என்பதனை ஒருங்கிணைப்பாளர் கேட்டனர் அதற்கு இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு ஒருங்கிணைப்பாளர் எங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கிராமப்புறங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார் அதில் உங்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டபோது நான் நாங்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் எங்களின் ஆசிரியர்களிடம் பேசி நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று கூறினார்கள் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளது என்று கேட்டபோது நான் முதலில் எந்த பெண்ணிற்கும் பாலியல் துன்புதலை ஏற்படுத்த மாட்டேன் என்று ஒரு இளைஞர் கூறி அதனை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஊக்குவிக்கும் விதமாக அனைவரும் அவருக்கு பாராட்டியிலே தெரிவிக்க வேண்டும் என்று கைத்தட்டி உற்சாகப்படுத்தினார் பின்பு வேறு என்ன வாய்ப்பு உள்ளது என்று கேட்டபோது எங்களுக்கு தெரியவில்லை இதுதான் தெரிந்த வரை என்று கூறினார் அதற்கு ஒருங்கிணைப்பாளர் நீங்கள் பாலியல் வன்முறை எங்கு நிகழ்ந்தாலும் உடனடியாக காவல்துறை சமூக நலத்துறை எங்களைப் போன்ற சமூக தன்னார்வ அமைப்புகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவி செய்ய வாய்ப்பு கிட்டும் என்று கூறினார் பிறகு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீங்கள் ஆதரவாக செயல்பட வேண்டும் அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது அவர்களுக்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சிறந்த திகழ்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பேசப்பட்டது பிறகு இளைஞர்களை ஒருங்கிணைத்து whatsapp குழு உருவாக்க வேண்டும் அதில் அரசு அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து குழு உருவாக்குகிறோம் அதில் நீங்கள் எந்த பதிவாக இருந்தாலும் உடனடியாக பதிவு செய்தால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடி தீர்வு கரைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார் இதுபோன்ற ஒத்துழைப்பினை நீங்கள் வழகினால்தான் பாலியல் வன்முறையை குறைக்க முடியும் என்று விளக்கி பயிற்சியினை முடிக்கப்பட்டது.



Leave a comment