“பெண் சாதனையாளர் விருது “

புதுச்சேரி மார்ச் 24, பெண் சாதனையாளர் விருது அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர் திருமிகு பா லலிதாம்பாள் அவர்களுக்கு,  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் 21.03.2023 அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அதேகொம் பின்னகம் 30 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை செய்து வருகிறது புதுவை கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி காரைக்கால் தஞ்சாவூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளை அதேகொம் பின்னகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றது. இத்தகைய பணியினை பாராட்டும் வகையில் அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலருக்கு இந்த பெண் சாதனையாளர் விருது  வழங்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.  இந்த நிகழ்வில்  அண்ணாமலை பல்கலைக்கழக  துணைவேந்தர் முது முனைவர் இராம. கதிரேசன் ,அண்ணாமலை பல்கலைக்கழக திவாளர்  முனைவர் கீ.சீத்தாராமன் ஆகியோர் பங்ககேற்றனர் . உலக மகளிர் தின விழா மேடையில் இந்த விருது திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களால், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  பரிந்துரையின் அடிப்படையில் அதேகொம் பின்னகம் நிர்வாக அறங்காவலர் திருமிகு பா லலிதாம்பாள் அவருக்கு இந்த சாதனை விருது வழங்கப்பட்டதாக பல்கலைக்கழக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இந்த விருதினை பெற்ற   அதேகொம் பின்னாக அறங்காவலர் அவர்களுக்கு அதேகொம் பின்னக பணியாளர்கள், சமூக தலைவர்கள், கிராம தலைவிகள்  அனைவரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a comment