26.3.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம் ஜானகி புரம் கிராமம் இளைஞர்கள் பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தலைப்பு பாலியல் வன்முறை நிகழ்ச்சியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் முதலில் இளைஞர்களை ஒருங்கிணைத்து சென்ற மாதம் நடத்திய அமர்வை நினைவூட்டல் செய்யப்பட்டது. அதன் பின்பு இரண்டு குழுக்களாக பிரித்தார் இரண்டு குழுக்கள் இடமும் இரண்டு குழுக்களும் கொடுக்கும் கேள்விகளுக்கு சார்ட்டில் எழுத வேண்டும் என்று பேசப்பட்டது.அதன் பின்பு இளைஞர்களிடம் பாலியல் வன்முறை என்றால் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இளைஞர்கள் விருப்பம் இல்லாமல் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து செல்வது பாலியல் வன்முறை அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் புகைப்படம் வீடியோ மற்றும் மெசேஜ் பதிவு செய்தால் பாலியல் வன்முறை கடத்தி சென்றான். பாலியல் வன்முறை பெண்களின் விருப்பம் இல்லாமல் தொடுவது பாலியல் வன்முறை 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை விருப்பத்தோடு தொட்டாலும் பாலியல் வன்முறை. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரி தொந்தரவு செய்வது பாலியல் வன்முறை கணவனே தன் மனைவியினை பாலியல் வன்முறை செய்யப்படுவார் என்று கூறினார்கள் இதற்கு இரண்டு குழுக்களையும் உற்சாகப்படுத்தி கைத்தட்டு கொடுத்தார் அனைத்து இளைஞர்களும் ஆர்வமாக பதில்களை பதிவு செய்தனர். பின்பு பாலியல் வன்முறை யாரால் நிகழ்த்தப்படும் எங்கெல்லாம் நடக்கும் என்பதனை கூற வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார், அதற்கு இளைஞர்கள் நண்பர்களால் ஏற்படும் உறவினர்களால் ஏற்படும் தந்தையாலும் ஏற்படும் உயர் அதிகாரிகளால் ஏற்படும் என்று கூறினார்கள் பின்பு பொது இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் வீடுகளிலும் கல்லூரி மருத்துவமனை கிராமப்புறங்களில் வயல்வெளி இது போன்ற இடங்களில் நடைபெறும் என்று இளைஞர்கள் விலகினார்கள்.விடுபட்ட தகவல்களை ஒருங்கிணைப்பாளர் வழங்கினார் .
இந்த பாலியல் வன்முறையினை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் என்ன வாய்ப்பு உள்ளது அதில் உங்களின் பங்கு என்ன என்று கேட்டார். அதற்கு இளைஞர்கள் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை நீங்கள் விளக்குங்கள் என்று கூறினார் அதற்கு ஒருங்கிணைப்பாளர் பாலியல் வன்முறை நீங்கள் எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல்துறைக்கும் சமூக நலத்துறைக்கும் எங்களைப் போன்ற சமூக அமைப்புகளுக்கும் தகவல் உடனடியாக கொடுக்க வேண்டும் அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவும் வகையில் நாங்கள் பணியினை மேற்கொள்வோம் அதே சமயம் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடி தண்டனை வழங்குவதற்கு பணியினை மேற்கொள்வோம் என்று கூறினார் பின்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் உங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் நீங்கள் பயிலும் கல்லூரிகள் பள்ளிகள் இந்த இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதே சமயம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர் இணை கண்டால் நீங்கள் ஒதுக்கி வைக்கக் கூடாது அவர்கள் அது போன்ற ஒதுக்கி வைப்பதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை தற்கொலை முயற்சியினை செய்வார்கள் எனவே நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் ஆலோசனை வழங்க வேண்டும் மீண்டும் அவர்கள் படிப்பதற்கோ வேலைக்கு செல்வதற்கும் தூண்டுதலாக இருக்க வேண்டும் என்று விளக்கினார்








Leave a comment