புதுச்சேரி-28 ஒருங்கிணைந்த அங்கன்வாடி மையமும் ,அதே கம் பெண் ஒளி கூடம். இணைந்து நடத்தும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த தடுப்பு சட்டம் -2005 நிகழ்வு. உழவர் கரையில் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் மூத்த அங்கன்வாடி ஆசிரியர் திருமுகியலன் திருமிகு எலன் பேசுகையில் உழவர் கரையில் குடும்ப வன்முறை நிகழ்வுகள் நடப்பதால் இப்பகுதியில் இதுபோன்ற விழிப்புணர்வு வழியாக பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளும் சட்ட உதவிகளும் தேவைப்படுகிறது அதிகம் பின்னகம் தொடர்ந்து இப்பகுதியில் நிகழ்வுகளை செய்வதன் வழியாக குடும்ப வன்முறைக்கான ஆலோசனைகளை பெண்கள் எளிதாக பெறுகிறார்கள். இப்பகுதியில் குடி பிரச்சினை யின் காரணமாக அதிக இளம் பெண்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். அவற்றிற்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி பேசினார்கள்.
மேலும் திருமிகு ரோஸ்லின் ஷீலா அவர்கள் (நிறுவனர் மனிதநேய மறுவாழ்வு குழுமம்) நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழிமுறைகளை கூறினார்கள். குறிப்பாக தங்களது கிராமங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தன்னார்வ தொண்டு நிறுவன அதே கம் பின்னகத்தில் கூறலாம் .அல்லது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையில் பெண்களின் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறலாம், அவர்களே நீதிமன்றம் வரை உறுதுணையாக செயல்படுவார்கள் எனக்கூறினார்.
வழக்கறிஞர் தமிழரசன் அவர்கள் பேசுகையில் குடும்ப வன்முறை சட்டம் -2005இல் தொடங்கப்பட்டு- 2006 இல் நடைமுறைக்கு வந்தது .மேலும் இச்சட்டம் சிறப்பு வாய்ந்த சட்டமாகும் எனவே இச்சட்டத்தை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் .எனக் கூறினார். குறிப்பாக இச்சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜீவனாம்சம் பெற்று தர முடியும், இருக்க இடம் மற்றும் பணியிடத்திலும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு நீதிமன்றத்தில் பெற முடியும். குடும்ப வன்முறை சட்டம் என்பது குடும்பத்தில் உள்ள பாதிப்பு ஏற்படுத்திய அனைவருக்கும் வழக்கு பதிவு செய்து நீதியை பெறுவதற்கு இச்சட்டம் உதவுகிறது .எனவே இச்சட்டத்தினை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீங்களே முன்னின்று செயல்படுத்தலாம் என கூறினார். அடுத்து திரு ஆர் ரகுநாதன் அவர்கள் (ASHI) குடும்ப நல ஆலோசகர் அவர்கள் பெண்கள் வன்முறை குறித்து செயல்பாடுகள் மற்றும் பெண்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும். என்பது பற்றியும் பெண்களின் மேம்பாடு குறித்தும் விளக்க உரையாற்றினார். ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது அழகை மட்டும் பார்க்காமல் அவர்கள் நல்லவர்களா? என்பதை ஆராய்ந்து பார்த்து செயல்படுங்கள். பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள் .பெண் பிள்ளைகளிடம் அடிக்காமல் அன்பை காட்டுங்கள் எனக் கூறினார் முன்னதாக அதை கம் பெண் ஒளி கூட பணியாளர் சாந்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர்களே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார் .இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.





Leave a comment