அதே கோம் பின்னகம்,கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் அங்கன்வாடி சமூக குழுக்கள் ஒருங்கிணைந்த பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கரிக்கலாம் பாக்கம் அங்கன்வாடி மையத்தில் 20 4 2023 காலை 10:30 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமிகு கௌசல்யா முன்னாள் அங்கன்வாடி உதவியாளர் வரவேற்புரையாற்றினார்.
திருமிகு பத்மாவதி குடும்ப ஆலோசகர் அதே கோம் பின்னகத்தின் நோக்கங்கள் செயல்திட்டங்கள் மைத்திரி திட்டத்தின் அடிப்படையில் பணி செய்யும் மாவட்டங்கள் அவற்றின் நோக்கங்கள் மற்றும் குடும்ப வன்முறை பாலியல் வன்முறை பெண்களுக்கு எதிராக இன்று அதிக அளவில் உள்ளது.மேலும் குடும்ப வன்முறை என்றால் குடும்பம் என்ற அமைப்புக்குள் கணவர் மற்றும் கணவரின் உறவினர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன ரீதியான உடல் ரீதியான துன்புறுதல்களை குடும்ப வன்முறை என்று கூறுகிறோம். வரதட்சனை கொடுமை வீட்டை விட்டு வெளியேற்றுதல் வார்த்தைகளால் துன்புறுத்துதல் அடித்தல் பாலியல் ரீதியாக வற்புறுத்தல் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை குழந்தைகள் மற்றும் உறவுகளை காட்டி மிரட்டல் செய்தல் இவை அனைத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு சட்டம் 2005 இல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்கு பல வகையில் பாதுகாப்பு அளிக்கவும் நிவாரணம் பெறவும் இந்த சட்டம் வழி வகை செய்யும்..இச்சட்டத்தில் பாதுகாப்பு உத்தரவு வசிப்பதற்கான உத்தரவு நிவாரணம் பெற உத்தரவு குழந்தை பாதுகாப்பு போன்றவைகளை நீதிமன்றத்தின் மூலம் பெற்று தரப்படும். உங்கள் பகுதியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீங்கள் ஒன்றிணைந்து அவர்களை புறம் பேசாமல் அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் ஆலோசனை மையங்களுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும். அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக குடும்ப சம்பவ அறிக்கை செய்தல் மருத்துவ பரிசோதனை செய்ய உதவி பாதுகாப்பு இல்லங்களில் தற்காலிகமாக தங்க வைத்தல் பாதுகாப்பு அதிகாரி வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு பதிவு செய்தல் இலவச சட்டப் பணியாணையம் நிவாரணம் பெற நீதிமன்ற உத்தரவு இவை அனைத்தும் ஒன் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைகளை ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற பாரபட்சம் இல்லாமல் சமத்துவத்தோடு வளர்க்கவும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை பற்றி ஒவ்வொரு நிமிடமும் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் மேலும் குழந்தைகளை தனிமையில் விட்டுச் செல்லுதல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் மேலும் இன்று குழந்தைகளுக்கு தெரிந்த நபர்களாலே பாலியல் வன்கொடுமைகள் நடக்கப்படுகின்றன மேலும் குழந்தைகளிடத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை புரியும் விதத்தில் எடுத்துக் கூறுங்கள் குற்றவாளிகளாக கூறாதீர்கள் உங்களின் அணுகு முறையில் மூலம் தான் குழந்தைகளுக்கு நடக்கும் விஷயங்களை உங்களிடம் தைரியமாக பகிர்ந்து கொள்வார்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம் அலுவலகத்தின் தொடர்பு எண்கள் மற்றும் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அங்கன்வாடி ஆசிரியை சமூக வள்ளுவர் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது உங்களுக்கு பிரச்சனைகள் என்றால் அவர்களை தொடர்பு கொண்டு கூறுங்கள் என்று கூறப்பட்டது














Leave a comment