இடம் : மங்கலம் இரவு பாடசாலை
22.4.2023. சனிக்கிழமை மாலை ஆறு முப்பது முதல் எட்டு முப்பது வரை
பாலின சமத்துவம் ஆண்மை பயிற்சி குறித்து அமர்வு 12 தலைப்பு தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்பதனை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி 25 மாணவர்களுடன் திருமிகு சுதா அவர்களின் வழி நடத்தலுடன் தொடங்கப்பட்டது.
முதலில் திருமிகு சுதா அவர்கள் மாணவர்களிடம் நடந்து முடிந்த பொதுத்தேர்வு பற்றி கேட்டறிந்தார் மாணவர்கள் அனைவரும் நன்றாக எழுதி இருப்பதாக கூறினார்கள் பிறகு முந்தைய அமர்வுகளைப் பற்றி புரிந்து கொண்டு பேசுமாறு கூறினார். மாணவர்கள் அனைவரையும் வட்ட வடிவத்தில் அமர்ந்தனர். முதலில் இன்றைய பயிற்சி ஒருவர் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது எந்த வகை வன்முறையைச் சார்ந்தது என்று கேள்வியை எழுப்பினார் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.பங்கேற்பாளர் ஒவ்வொருவராக தங்களின் கருத்துக்களை பகிர்வதை அதில் கோபம் வந்தால் சுவற்றில் தலையை இடித்துக் கொள்ளுதல் கத்தியால் கைகளை கிழித்து கொள்ளுதல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து மண்டையில் அடித்துக் கொள்ளுதல் உன் கைகளால் பொருட்களை குத்தி உடைத்தல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் விஷம் குடித்தல் சாப்பிடுவதில்லை போன்றவை ஆகும். மேலும் இவ்வாறு துன்புறுத்திக் கொள்ளுதல் எந்த காரணத்தினால் ஏற்படும் என்று பங்கேற்பாளரிடம் கேட்கப்பட்டது பங்கேற்பாளர்கள் தன்னை மற்றவர்களிடம் ஒப்பிட்டு பேசுதல், எப்போதும் குறை கூறுதல்,வேலைவாய்ப்புகளைப் பற்றி யோசித்தல், குடும்பத்தில் தன்னை பாரமாக நினைக்கும் போது. தேர்வில் தோல்வியுறுதல், நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஏமாற்றுதல், காதல் தோல்வி ,தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை, மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் போது என்று பதில் கூறினர்.
திருமிகு சுதா அவர்கள் பங்கேற்பாளர்களிடம் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல் எவற்றால் ஏற்படுகின்றன மேலும் இபாதிப்புகள் ஏற்படும் போது ஆண்கள் உங்களின் குணாதிசயங்கள் எவ்வாறு வேறுபடும் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று பங்கேற்பாளரிடம் கேட்கப்பட்டது. சஞ்சய் அவர்கள் கூறியது இவ்வாறு பாதிப்புக்கு உடையவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்கள் அனைவரிடத்திலும் எரிச்சலுடன் காணப்படுவார்கள் மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவார்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் இருப்பார்கள் எதிர்பார்த்தாலும் பயந்த உணர்வுடன் காணப்படுவர் எந்த செயல்களிலும் அக்கறை இல்லாமல் இருப்பார்கள் என்று கூறினார். நிகழ்ச்சியின் இடையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறிய விளையாட்டு ஒன்று நடத்தப்பட்டன மாணவர்கள் உற்சாகப்படுத்துவதற்கு விளையாட்டு உதவியாக இருந்தது மேலும் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் கோபங்களையும் நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும் இன்றைய சமுதாயத்தில் காலகட்டத்தில் நாம் சில நேரங்களில் யோசிக்காமல் கோபப்படுவதன் விளைவுகள் நம்மை பாதிப்புக்கு ஏற்படுத்தி விடுகின்றன தன்னைத்தானே வருத்திக் கொள்வதும் மற்றவர்களை வருத்துவதும் தவறானதாகும். நீங்கள் தன்னுடைய பிரச்சினைகளை வெளியே கூறக்கூடாது கூறினால் தவறாக நினைத்து விடுவார்கள் என்று எண்ணக்கூடாது உங்களின் நம்பிக்கையாளர்களிடம் உங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும் சிந்தனைகளை நல்ல வழியில் பயன்படுத்தினால் ஆண்கள் ஆகிய நீங்கள் மிகவும் வன்முறையை தூண்டுபவர்கள் என்ற எண்ணத்தை சமுதாயத்தில் மாற்ற முடியும் மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்று மாணவர்களிடையே அவர்களின் கருத்துக்களை பதிவு செய்யப்பட்டது தங்களின் ஆண்மை குறித்த பயிற்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் பிறகு பங்கேற்பழல் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது மேலும் உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை காணொளி கா வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது












Leave a comment