அதே கோம் பின்னகம் கூட்டுக் குரல் நாடக இயக்கம் மற்றும் பாரத் மாதா போதை மறுவாழ்வு மையம் இணைந்து ஒருங்கிணைந்த ஆண்களின் போதை பழக்கத்தினால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் குடும்ப வன்முறை பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இடம் சேந்தநத்தம் கிராமம் 24.04.23, காலை 10:30 முதல் 12 30 வரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அங்கன்வாடி ஆசிரியர் திருமிகு பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திரு குப்புசாமி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாரத் மாதா போதை மறுவாழ்வு மையம் அவர்கள் கூறிய கருத்து என்று இளைய தலைமுறையில் இருந்து குடிப்பழக்கத்திற்கும் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவை அவர்களின் உடல் மனம் வாழ்வை அழித்து விடுகின்றன மேலும் இப்பழக்கத்திற்கு ஆளாகுவதை நாளடைவில் ஆண்களுக்குள் விபரீதமான முடிவுகளையும் செயல்களையும் செய்யத் தூண்டுகின்றன பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளிடத்தில் நல்ல பழக்கங்களையும் நீங்கள் ஒரு முன் உதாரணமாகவும் வளர்க்க வேண்டும் மேலும் அவ்வாறு பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால் சிகிச்சை மையத்திற்கு அழைத்து வந்தால் ஆலோசனை வழங்கப்படும் சிகிச்சை அளிக்கப்படும் போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை நாம் குடும்பத்தில் ஒதுக்கி வைப்பதனால் மேலும் அவர்கள் பழக்கத்திலிருந்து மீள முடிவதில்லை. இதனால் வன்முறை கொலை குற்றங்கள் தவறான செயல்களில் தங்களுக்கு தெரியாமலே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.அவர்களுக்குள் புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்
திருமிகு பர்மாவதி கூட்டுக்குள் நாடக இயக்கம் அவர்கள் கூறிய கருத்து இன்று ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு மற்றும் போதை பழக்கத்திற்கும் ஆளாகி வருவதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அன்றாடம் தொலைக்காட்சிகள் செய்தித்தாள்களில் பெண்கள், பெண் குழந்தைகளின் ஏற்படும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்கும் குறைப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் அதே கோம் பின்னகம் கூட்டுக்குரல் நாடக இயக்கம் மற்றும் விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் செங்கல்பட்டு திருவண்ணாமலை காரைக்கால் பகுதிகளில் பங்குதாரர்களுடன் இணைந்து விழிப்புணர்வுகள் வழங்கி வருகிறோம். மேலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் 2005 மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சேவை வழங்கினராக அங்கீகாரம் பெற்று பணி செய்து வருகிறோம் உங்கள் பகுதியில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்தால் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் விஷயங்கள் பாதுகாக்கப்படும் மேலும் பெண்கள் குழந்தைகளுக்காக பணி செய்யும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து புதுச்சேரியில் உள்ள கிராமங்களில் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம் என்று கூறினார். குழந்தைகளை பாதுகாப்புடன் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் இருக்க வேண்டும் மேலும் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் இரண்டு குழந்தைகளையும் சரிசமத்துடன் அனைத்து உரிமைகளையும கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருமிகு தமிழ்ச்செல்வி ஆஷா பணியாளர் திருமிகு ஷர்மிளா பானு ஆஷா பணியாளர் மற்றும் திருமிகு ரசிகா கிராம செவிலியர் அங்கன்வாடி ஆசிரியை தனம் மற்றும் பாரத் மாதா போதை மறுவாழ்வு பணியாளர்கள் கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் குழந்தைகள் வளர இளம் பெண்கள் பெண்கள் 25க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் திருமிகு பக்கிரி அவர்கள் இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் குடும்பத்தில் வன்முறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் குடிப்பழக்கம் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் வன்முறை இல்லை அவற்றை மாற்ற வேண்டும் என்று கூறினார் திருமிகு கிரிஜா அவர்கள் கூறிய கருத்து இன்று பெண் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமான செயலாக தெரிகிறது குழந்தைகளை தனித்து விட்டு எங்கும் செல்ல இயலவில்லை குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூறிய கூட்டுக் குரல் நாடகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்













Leave a comment