காரைக்கால் , 26-4-2024 அன்று காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு அதற்கும் பின்னகம் புதுச்சேரி பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை ஆகியவை ஒருங்கிணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தால் தடுத்தல் தீர்வு காணுதல் பல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்வரவேற்புரை திருமிகு சுதா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அதே கொம் பின்னகம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார் பின்பு இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்காக நோக்கம் சர்வேவர் என்ற சொல்லக்கூடிய வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுதல் எனவே நாங்கள் செங்கல்பட்டு மறைமலைநகர் எஸ்ஐ ஆர் டி என்ற இடத்தில் மாநில அளவில் 8 மாவட்டத்தையும் ஒருங்கிணைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். அக்கூட்டத்தில் 8 மாவட்டத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பணி செய்யும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி பெற்றுக் கொடுக்க என்ன சவால்கள் தடைகள் உள்ளது என்பதனை ஒவ்வொரு துறையினரும் பகிர்ந்து கொண்டனர் அதனை நாங்கள் கோரிக்கையாக தயார் செய்து ஒவ்வொரு துறையை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் வக்காலத்தாக வழங்கப்பட்டது அது நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளையும் எடுத்து கூறினார்.
துவக்க உரை
திருமிகு ப. லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அதே கொம் பின்னகம் புதுச்சேரி அவர்கள் பேசுகையில் மீண்டும் உயிர் பிழைத்த நபருக்கு உறுதுணையாக இருப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் தான் 16 17 18 வயதில் பாதிக்கப்பட்ட வழக்கிற்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மாற்ற கலந்தாய்வுக் கூட்டம் குறித்தும் விலகினார் சீதா கலந்தாய்வுக் 1980 ஆரம்பிக்கப்பட்டது 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் 2030ல் எப்படி எல்லாம் பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்படும் என்று டிகிரி நடந்த கூட்டத்தில் பேசப்பட்டது என்று கூறினார் மேலும் இக்கூட்டத்திற்கான நடைமுறைகளையும் செயல்முறைகளையும் தெளிவாக எடுத்து கூறினார். ஒவ்வொரு துறையிலும் உள்ள பரிந்துரைகளை முன்வைக்குமாறு விளக்கினார்.
சிறப்புரை
திரு ஜான்சன் டி சி ஆர் ( துணை மாவட்ட ஆட்சியர்) அவர்கள் பேசுகையில் வன்முறையை தடுக்க வேண்டும் தடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் அனைவரும் ஆலோசிக்க வேண்டும் குழந்தைகள் படம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எளிதில் புரிந்து கொள்வார்கள். அதற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட அதிகம் உறவுகள் தான் காரணம் உறவினர்களால் தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதனை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் விளக்கினார்
முதன்மை உரை
திரு சுப்பிரமணியன் எஸ் பி அவர்கள் பேசுகையில் பாடப் புத்தகத்தில் வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் புதுச்சேரியில் மொத்தம் 238 வழக்குகள் பதிவாகியுள்ளது குழந்தைகளுக்கு முதலில் கல்வியறிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள மறுப்போம் எஸ் ஓ எஸ் என்ற ஆப் மூலம் தனியாக செல்லும் பெண்கள் காவல்துறையிடம் உதவி பெறலாம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் 17 வயதில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமாக சமாதானமாக போகிறார்கள் அது சூழ்நிலை என்று நாமும் புரிந்து கொள்ள வேண்டும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் நாம் என்ன இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று கலந்தாய்வு செய்ய வேண்டும் 11 12-ம் வகுப்பு படிக்கும் பொழுது குழந்தைகளுக்கு நிறைய தவறுகள் நடைபெறுகின்றன அந்த வயதில் தான் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பெண் குழந்தைகளிடம் நிறைய நேரம் ஒதுக்கி பேச வேண்டும் போன் மூலம் தான் அதிகம் குற்றம் ஏற்படுகின்றது என்றும் கூறி எந்த ஒரு உதவியாக இருந்தாலும் உடனடியாக காவல்துறையை அணுகலாம் என்று கூறினார்.
கலந்தாய்வு துவக்க உரை
திரு மதன் பாபு உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி அவர்கள் பேசுகையில் வன்முறை அதிகம் நடக்க காரணம் மது என்றும் அதை நாம் எப்படி குறைப்பது என்றும் தொலைபேசி மூலம் தான் அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது இதனை எப்படி கையாள்வது என்று நாம் கவனம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
திருமிகு பத்மினி அவர்கள் மருத்துவமனையில் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
மருத்துவர் ஆன்னி பியூலா ஜூலியட் அவர்கள் பேசுகையில் நாங்கள் அதிக போக்சா வழக்குகளை கையாண்டு வருகிறோம் 15 16 17 18 இந்த வயதில் உள்ள குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் இவர்கள் பாதிக்கப்படுவதற்கு பெற்றோர்கள் ஒரு காரணம் என்று என்னால் சொல்ல முடியும் ஏனென்றால் பெற்றோர்களுக்கு நிச்சியம் குழந்தைகள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதனை கண்டறிய முடியும் ஆனால் அவர்கள் கண்காணிப்பதில்லை எனவே பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
திருமிகு. சத்யா குழந்தைகள் நல திட்ட அதிகாரி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அவர்கள் பேசுகையில் அதே கொம் பின்னகம் சிறப்பான பணிகளை செய்து வருகின்றது எங்கள் தலைமை அலுவலகத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று எங்களுக்கு கூறியுள்ளார்கள் அவர்கள் நிறைய வழக்குகளுக்கு உதவி செய்து வருகின்றனர் அதனை பெற்று உங்கள் பகுதியில் உள்ள வழக்குகளுக்கும் நீங்கள் உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
திருமிகு உமா மகேஸ்வரி வழக்கறிஞர் அவர்கள் பேசுகையில் அனைவரின் கருத்தும் ஆலோசனை என்றுதான் கூறுகின்றோம் உண்மைதான் அதிக வழக்கில் குற்றவாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே நாம் ஆண்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது . வழக்கு தீர்வுக்கான தாமதம் ஆகுவது நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணம் அதனை நீதிபதி அமைப்பதற்கு அரசு பொறுப்பு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்
திரு ராஜசேகர் முதன்மை கல்வி அதிகாரி அவர்கள் பேசுகையில் கல்விக் கொள்கை முற்றிலும் மாறிவிட்டது மாணவர்கள் கண்டிக்க முடியவில்லை சி எஸ் எஸ் போர்டு என் எஸ் எஸ் மூலம் நலப்பணிகள் செய்து வருகிறோம் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை பள்ளிகளில் செக்ஸ் கல்வி அவசியம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் உடல் உறுப்புகளை பற்றி பகிர வேண்டும் அவர்களை பேச வைக்க வேண்டும்.
திரு ரவிசங்கர் பாதுகாப்பு அதிகாரி அவர்கள் பேசுகிறியில் அதே கோம் பின்னகம் சிறப்பான பணிகளை சில ஆண்டுகளாக காரைக்கால் மாவட்டத்தில் செய்து வருகின்றனர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எங்கள் அலுவலகம் தயாராக உள்ளது என்றும் கூறி ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் 13 வயதில் உள்ள குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் அவர்களால் தாங்க முடியாத நிலை ஏற்படும் பொழுது பெண்கள் வழக்கினை பதிவு செய்ய வருகின்றனர் அவர்களுக்கு முதலில் ஆலோசனை அவசியம் வழக்கு பதிவு செய்வது என்பது இரண்டாவது நிலை என்று விளக்கினார்
திரு சுரேஷ் குமார் நிர்வாக உதவியாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் அவர்கள் பேசுகையில் அனைத்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குற்றம் நடைபெறுகின்றது சட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அவசர உதவி எண்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் பெண்கள் கூட்டத்தில் மகளிர் தின விழாக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் லீகல் அட் மூலம் விழிப்புணர்வு கொடுக்கலாம் உடன் இணைந்து செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமிகு சங்கரி குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் வழக்கறிஞர் அவர்கள் பேசுகையில் குழந்தைகள் நலக்குழு அலுவலகம் யாருக்கும் தெரியவில்லை முதலில் அரசு அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால் அவருக்கு தீர்வு வழங்குவதற்கான இடம் குழந்தைகள் நலக்குழு இதனை பொதுமக்களுக்கும் நீங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு அவசியம்.
திருமிகு கிருஷ்ணவேணி நல அதிகாரி மற்றும் மைய நிர்வாகி ஓ எஸ் சி அவர்கள் பேசுகையில் நாம் அனைவரும் நாம் நிறைய பேசிக்கொண்டே உள்ளோம் பாதிப்பு ஏற்படுகிறது பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் இதுவரை எதுவும் செய்யவில்லை என்று கூறினார் அதற்கு துணை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உங்களின் ஆதங்கம் இந்த கூட்டத்திலேயே தீர்ந்துவிடும் முதலில் நாம் இந்த கூட்டத்தில் பேசிய அனைத்து கருத்துகளையும் மினிட்ஸ் ஆக பதிவு செய்ய வேண்டும் அதனை எங்களுக்கு கோரிக்கையாக வழங்குங்கள் நாம் எப்படி இதனை தீர்வு காண்பது என்று வழிவகை செய்யலாம் என்று கூறினார்.
சைல்ட் லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு விமலா அவர்கள் பேசுகையில் சைல்டு லைன் செய்து வரும் பணிகளை விளக்கி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தேவை அதனை அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இறுதியாக பா லலிதாம்பாள் அவர்கள் இங்கு ஒன்று சேர்ந்த அனைத்து அரசு அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி உருவாக்க வேண்டும் வழக்கினை கண்டறிவதற்கு அவர்களுக்கு தீர்வு வழங்குவதற்கும் இந்த கமிட்டி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
இறுதியாக துணை மாவட்ட ஆட்சியர் எஸ் பி முதன்மை கல்வி அதிகாரி உள்ளிருப்பு மருத்துவர் குழந்தைகள் நல திட்ட அதிகாரி பியூலா ஜூலியட் மருத்துவர் இவர்களுக்கு புத்தகம் வழங்கி நிகழ்ச்சியினை நிறைவு படுத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 27 நபர்கள் கலந்து கொண்டனர்
























Leave a comment