07.05.2023 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சுதா அவர்கள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புவன் பூவம் கிராமம் காலை 10:30 மணி அளவில் .ஒருங்கிணைத்து 27 இளைஞர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்தார். பயிற்சியில் சென்ற மாதம் எடுக்கப்பட்ட அமர்வினை நினைவூட்டல் செய்யப்பட்டது. அதன் பின்னோட்ட கருத்தினை இளைஞர்களிடம் பெறப்பட்டது. அப்பொழுது இளைஞர்கள் அனைவருக்கும் கட்டாய கல்வி தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டோம். கட்டாய கல்வி கொடுப்பதினால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகளை புரிந்து கொண்டோம். குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை மற்றும் அரசாங்கத்தின் கடமை என்பதனை தெரிந்து கொண்டோம். பள்ளி வயதுக்கு ஏற்ப கல்வியை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம் என்று கூறினார்கள். எங்கள் கிராமங்களில் உள்ள பெண்கள் படிப்பதற்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார்கள்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசவு மொழி என்ற தலைப்பில் பயிற்சி எடுத்தார் இப் பயிற்சியில் இளைஞர்களிடம் பெண்களை தரக்குறைவாக என்ன பேசுவார்கள் என்று இளைஞரிடம் கேட்டறிந்தார் அதற்கு ஒழுக்கம் இல்லாதவள் ஓடுகாளி தகாத வார்த்தையால் திட்டுதல் யாரிடம்மாவது பழகினால் அதனை தவறாக பேசுவது என்று கூறினார்கள் பின்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுபட்ட சொற்க ளை இளைஞர்களிடம் கூறினார் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் வரதட்சணை என்ன வாங்கி வந்தியா என்று கேட்பது குழந்தை இல்லை என்றால் மலடி என்று பேசுவது கணவனை விட்டு பிரிந்து இருந்தால் வாழாவெட்டி என்று கணவன் இறந்து விட்டால் விதவை என்று சொல்வது மறுக்கணவனை தேர்ந்தெடுத்தால் ஒழுக்கம் இல்லாதவள் சொல்வது விபச்சாரி என்று பேசுவது பட்டப்பெயர் வைத்து அழைப்பது இவை எல்லாம் தரக்குறைவான வார்த்தைகள் என்று இளைஞர்களிடம் எடுத்துரைத்தார் பின்பு இந்த சொற்களை எதற்காக பயன்படுத்துகின்றனர் என்பதனை இளைஞர்களிடம் கேட்டறிந்தார் இளைஞர்கள் கோபமாக இருக்கும் பொழுது பேசுவார்கள் சண்டை என்றால் அப்பொழுது பேசுவார்கள் பெண்கள் ஆண்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் அப்பொழுது பேசுவார்கள் பெண் பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே அடக்கி வைப்பதற்கு பேசுவார்கள் வரதட்சனை கொடுக்கவில்லை என்றால் கேட்பார்கள் திருமணம் ஆகி பல வருடங்கள் குழந்தை இல்லை என்றால் பேசுவார்கள் என்று இளைஞர்கள் கூறினார் இன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுபட்ட விவரங்களை விளக்கினார் ஒரு பெண் வேலைக்காக வெளியில் செல்கிறார்கள் என்றால் வீட்டில் உள்ளவர்கள் பேசுவது அதே சமயம் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கௌரவம் போய்விடும் என்பதற்காக பேசுவார்கள் பெண் பிள்ளையை வெளியில் செல்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ஆண் பிள்ளைகளை அவர்கள் இஷ்டம் போல் நடப்பதற்கு விடுவார்கள் கணவர் இறந்துவிட்டால் அந்த நிலையில் உள்ள பெண்களை பேசுவார்கள் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூறினார்
பின்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சமூகத்தில் பெண்களை பாதிக்கும் வகையில் மக்கள் மற்றும் ஆண்களும் வசவு மொழிச் சொற்களை வைத்து பெண்களை பேசுவார்கள் ஆனால் இதுபோன்று ஆண்களை குறிக்கும் மாதிரி வசு மொழி பயன்படுத்துவதில்லை இது தவறு என்பதனை சுட்டிக்காட்டினார் இதுபோன்று நமது பகுதியில் வசவு மொழியில் பேசுபவர்களை இளைஞர்களும் ஆண்களும் சிறுவர்களும் தடுத்து நிறுத்துவது முக்கியமானதாகும் எனவே நமது முகத்தில் உள்ள ஆண் பெண் பாகு நம்பிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது அதற்கு நீங்கள் முக்கிய காரணமாக அமைத்து பகுதியில் உள்ள பெண்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று விளக்கினார்
பிறகு வன்முறையின் வகைகள் என்ற தலைப்பில் பயிற்சியினை தொடங்கினார் இளைஞர்களிடம் வன்முறை என்றால் என்ன என்பதனை கேட்டு அறிந்தார் அதற்கு இளைஞர்கள் பொறுக்க முடியாத அளவிற்கு ஒருவரை அடிப்பது அடித்து காயப்படுத்துவது நெருப்பால் சுடுவது வீட்டை விட்டு வெளியே துரத்துவது கடித்து துன்புறுத்துவது பாலியல் வன்புணர்வு செய்வது என்று கூறினார்கள் பின்பு ஒருங்கிணைப்பாளர் விடுபட்ட கருத்துக்களை கூறினார் அச்சுறுத்தல் செய்வது வெளியில் செல்ல விடாமல் தடுத்தல் கிண்டல் செய்தல் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தால் கொலை செய்தல் வேலை செய்ய அனுமதிக்காமல் இருத்தல் பணத்தை அபகரித்துக் கொள்ளுதல் பொருட்களை உடைத்தல் என்று கூறினார் பின்பு ஒருங்கிணைப்பாளர் இவையெல்லாம் வன்முறை ஆனால் இந்த வன்முறையில் நான்கு வகைப்படும் உடல் ரீதியான வன்முறை மன ரீதியான வன்முறை பாலியல் ரீதியான வன்முறை பொருளாதார ரீதியான வன்முறை இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது
உடல் ரீதியான வன்முறை அடித்தல் பாலியல் வன்புணர்வு செய்தல் வீட்டை விட்டு வெளியே துரத்துதல் கடித்தல் பிடித்து தள்ளுதல் என்று விளக்கினார்
மனரீதியான வன்முறை இழிவாகப் பேசுதல் வெளியே செல்ல அனுமதிக்காமல் இருத்தல் எது செய்தாலும் அவர்களை குறை கூறுதல் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தல் இவையெல்லாம் மன ரீதியான வன்முறை என்று கூறினார்
பாலியல் ரீதியான வன்முறை என்றால் பெண்ணின் விருப்பம் இல்லாமல் பாலியல் வன்புணர்வு செய்தல் கற்பழித்தல் பாலியல் தொந்தரவுக்கு செய்தால் சைகை காட்டுதல் ஆபாச படங்கள் காட்டுதல் ஆபாச வீடியோக்கள் காட்டுதல் ஆபாசமாக பாடுதல் என்று விளக்கினார்
பொருளாதார ரீதியான வன்முறை என்பது பணத்தை அபகரித்துக் கொள்ளுதல் வேலை செய்ய அனுமதிக்காமல் இருத்தல் சொத்துக்களை பிடுங்கிக் கொள்ளுதல் கூலி கொடுக்காமல் இருத்தல் முதலியவை பொருளாதார வன்முறை என்று விளக்கினார்
ஒருங்கிணைப்பாளர் ஒரு நபரின் விருப்பம் இல்லாமல் அந்த நபரிடம் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ உணர்வு ரீதியாகவோ பாலுணர்வு ரீதியாகவோ அல்லது பணரீதியாகவோ துன்புறுத்தல் ஏற்படுத்தினால் அது அந்த நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அது வன்முறை செயல் என்று எடுத்து கூறினார் பின்பு பங்கேற்பாளர்களிடம் பின்னோட்ட கருத்தினை பெற்றனர்.
இளைஞர்களிடம் உங்கள் கிராம அளவில் பயிற்சி பெற்றதற்கு பின்பு என்ன மாற்றம் அடைந்தீர்கள் உங்கள் குடும்பத்தில் என்ன மாற்றம் அடைந்தீர்கள் குழுவில் என்ன மாற்றம் அடைந்துள்ளீர்கள் என்பதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பின்னோட்டம் பெறப்பட்டது.











Leave a comment