புதுவை ஜூன்- 23 அதேகொம் பின்னகம் , பெண் ஒளிக்கூடம் இணைந்து பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து அங்கன்வாடி ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி திருமிகு அமலோற்பவம் மேரி தலைமை உரை ஆற்றுகையில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறினார் அங்கன்வாடி ஆசிரியர்கள் உதவியாளர்கள் நல்ல உறவு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் சேவை மையங்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தனியாக வாழும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையங்களை அணுகலாம் என கூறினார்.
பாதுகாப்பு அதிகாரி திருமிகு . சித்ரா பிரியதர்ஷினி, கூறுகையில் குடும்ப வன்முறையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் முதலில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சேவை வழங்குனர்களை அணுக வேண்டும். மேலும் எந்த குற்றம் என பிரிக்கப்படும் குடும்ப வன்முறை என்றால் மனரீதியாக, உடல் ரீதியாக, பொருளாதார , பாலியல் ரீதியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்பு உரிமை ,இழப்பீடு, கண்காணிப்பு, பாதுகாப்பு உத்தரவு ,பெற்று தரப்படும். குறிப்பாக கணவர் மனைவி இடமிருந்து குழந்தையை பறித்து எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதனை மீண்டும் மனைவியிடம் ஒப்படைக்க இலவச சட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள் நாங்களும் ஆலோசனை வழங்குகிறோம். நீதிமன்றம் எடுத்துச் செல்கிறோம். என கூறினார்கள்.
அதேகொம் பின்னகம் அறங்காவலர் திருமிகு லலிதாம்பாள், உரையாற்றுகையில் குடும்ப வன்முறை குறித்து பேசினார்கள். குடும்ப வன்முறை சேவை மையம் முதலில் அதேகொம் பின்னகம்தான் துவங்கப்பட்டது அதன் பின் அங்கீகாரம் பெறப்பட்டு சேவை வழங்குனர்களாக செயல்பட்டு வருகிறோம். குடும்ப வன்முறையை தடுக்க ஒரு கணவர் குடித்து துன்புறுத்தும் பட்சத்தில் மனைவிகள் அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச் செல்லலாம். குடும்ப வன்முறையால் விவாகரத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதனை தடுக்க வேண்டும் என்றால் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.சட்ட உதவிகள் செய்கிறோம் மருத்துவ உதவிகள் மனநல ஆலோசனை வழங்குகிறோம் எனக் கூறினார். வழக்கறிஞர்கள் திரு சிவக்குமார், திரு தமிழரசன், திருமதி செம்மலர், இவர்கள் பேசுகையில் குடும்ப வன்முறை சட்டம் 2005 இல் பெறப்பட்டது ஆனால் 2009இல் அமலுக்கு வந்தது எனவும் குடும்ப வன்முறையில் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு எந்த ஆதாரமும் ஆதார் கார்டும் ,விலாசமும் ,இல்லை கையில் குழந்தையுடன் நிற்கிறார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர் தன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார்கள் எனவே இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அதிகாரி ,காவல் நிலையம் ,அதே கம் சேவை வழங்குனரை அணுகலாம் என கூறினார்கள். முன்னதாக திருமிகு சாந்தி குடும்ப நல ஆலோசகர் அவர்கள் வரவேற்புரை வழங்கி குடும்ப வன்முறை குறித்தும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவசர எண் 181 மற்றும் அதே கம் சேவை மையம் என் 0413-2292160,9500933481 என்ற எண்ணை அணுகலாம் என கூறினார் திரு முகமது உஸ்மான் நிர்வாக அலுவலர் அவர்கள் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.







Leave a comment