24 ஜூன் மங்களம் , புதுச்சேரி
தலைப்பு ஆண்மையை வெளிப்படுத்துதல்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை இரண்டு குழுக்களாக பிரித்தார். பின்பு அந்த குழுக்களிடம் உருவப்படம் வரைந்து அதில் ஆணின் அடையாளங்களை வரைந்து எங்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு 20 நிமிடம் வழங்கப்பட்டது. இளைஞர்கள் சார்ட் பயன்படுத்தி அதில் ஒரு இளைஞரை படுக்க வைத்து படம் வரைந்தனர் பின்பு அதில் ஆண் என்பதற்கான அனைத்து அடையாளங்களையும் வரைந்து அதன் விவரங்களை இளைஞர்கள் விலகினார். பிறகு இளைஞர்கள் உருவப்படத்தில் மீசை தாடி பேண்ட் சர்ட் பிரேஸ்லெட் ஆண்கள் அணியும் அனைத்து பொருட்களையும் வரைந்து விளக்கினார்கள். பின்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆண் என்றால் நாம் எப்படி அடையாளப்படுத்துவோம் என்று கூறினார்கள், மீசை வைத்திருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள் என்று கூறினார்கள். அப்படி மீசை தாடி வைத்திருந்தால் ஆண் என்று எந்த புத்தகத்தில் யாவது எழுதப்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்கு இளைஞர்கள் இல்லை என்று கூறினார். ஏன் நாம் அப்படி கூற வேண்டும் என்று கேட்டார். இளைஞர்கள் பதில் அளிக்கவில்லை அதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமது சமூகம் தான் இதுபோன்ற கருத்துக்களை நமக்கும் குவித்து வைத்துள்ளது. ஆண் பெண் என்று நாம் அவர்களின் பிறப்புறுப்பை வைத்து தான் சொல்ல முடியும். எனவே நம்மளுடைய சமூகம் கட்டமைக்கப்பட்ட விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனை அவர்களிடம் விளக்கம் கொடுக்கப்பட்டது.
பின்பு ஆண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு இளைஞரை வைத்து இளைஞர்கள் சொல்லும் பதில்களை சார்ட்டில் எழுத வைக்கப்பட்டது அவர்கள் சொல்லும் பதிலில் நேர்மறை எது எதிர்மறை எது என்பதனை பிரித்து எழுதப்பட்டது. இளைஞர்கள் கூறிய பின்பு அவர்களுக்கு நேர்மறை கருத்துக்களையும் எதிர்மறை கருத்துக்களையும் எடுத்துக் கூறப்பட்டது. நாம் இதுபோன்று எதிர்மறை கருத்துக்களை கைவிட வேண்டிய தேவை உள்ளது. நேர்மறை கருத்துக்கள் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் நம் குடும்பத்திலும் சமூகத்திலும் நமது நண்பர்கள் மத்தியிலும் நேர்மறை கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் முதலில் நமக்குள் மாற்றம் ஏற்பட வேண்டும் ஆண்மை என்ற கட்டமைப்பை வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு தவறான செயல்களை செய்து வருகின்றோம் என்பதனை அவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டப்பட்டது பின்பு நேர்மறையான கருத்துக்களை அவர்களுக்கு புகுத்தப்பட்டது ஆண்கள் என்றாலும் அவர்களின் மனநிலையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடையும் சிறுவராக இருக்கும் போது ஒரு மனநிலையில் இருப்பார்கள் இளைஞர்களாக மாறும்பொழுது ஒரு மனநிலையில் இருப்பார்கள் ஆண்களாக மாறும்போது ஒரு மனநிலையில் இருப்பார்கள் முதியவர்களாக மாறும் பொழுது ஒரு மனப்பார்ப்பார்கள் என்பதனை அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது பின்பு நேர்மறையான இயல்புகளையும் சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் குடும்பத்திலும் நமது சமுதாயத்திலும் நேர்மறை கருத்துக்களை பயன்படுத்தி நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு விளக்கப்பட்டது.
இளைஞர்களின் பின்னோட்டத்தின் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.




















Leave a comment