சட்ட தன்னார்வலர்களுக்கான சட்டப் புரிந்துணர்வு ஒரு நாள் பயிலரங்கம்

விழுப்புரம் ஜூன் 26-அதேகொம் பின்னகம் பெண்கள் ஆதார மையம் ஒருங்கிணைக்கும் சட்ட தன்னார்வலர்களுக்கான சட்டப் புரிந்துணர்வு ஒரு நாள் பயிலரங்கம் இன்று நேரு யுவகேந்திரா உள் அரங்கில் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது, இந்த நிகழ்வு கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் 40 சட்ட தன்னார்வலர்களை உருவாக்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் வன்கொடுமை , குடும்ப வன்முறை தடுப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு இப் பயிற்சியின் மூலம் அடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகும் . மேலும் அதேகொம் பின்னகம் பெண்கள் ஆதார மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆர்த்தி எப்சிபா வரவேற்பு உரையாற்றி அனைவரையும் இந்த ஒரு நாள் பயிலரங்கத்திற்கு வரவேற்றார் . நிகழ்ச்சியின் தொகுப்பாளராக திரு. ஜான் போஸ்கோ செஞ்சி பெண்கள் கண்ணியம் மைய கள ஒருங்கிணைப்பாளர் தொகுத்து வழங்கினார் .

அதேகொம் பின்னக நிர்வாக அறங்காவலர் திருமிகு.லலிதாம்பாலே துவக்க ஆற்றினார் அவர் பேசுகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கும் , குடும்ப வன்முறைகளை குறைப்பதற்கும் சட்டம் சார்ந்த கருத்துரைகளை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு பெற்று கிராம அளவில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆதரவு அளிக்குமாறு சட்டத் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார் இவரைத் தொடர்ந்து .

சிறப்புரையாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமிகு. ராஜாம்பாள் அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அலுவலர் திருமிகு. முத்தமிழ்ஷீலா மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி திருமிகு.பத்மாவதி ஆகியோர் ” பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் சட்ட தன்னார்வலர்களுக்கு பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்தும் இதில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை ஆணா பெண்ணா என்று கண்டறிவது குற்றம் எனவும் பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைந்து வருவதை தடுப்பதற்கு கிராம அளவில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சட்டத்தண்ணார்வலர்களை ஊக்கப்படுத்தினார் .

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக, பாதுகாப்பு அலுவலர் திருமிகு.பிரமலதா குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் அதில் பயன்பெறும் வழிமுறைகளை குறித்தும் விவரித்துக் கூறி பங்கேற்பாளர்கள் அவர்களது கிராமப் பகுதியில் பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்தார் .

இவரைத் தொடர்ந்து குற்றத் தடுப்பு பிரிவு பெண்கள் மற்றும் குழந்தைகள் துறையிலிருந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதர் அவர்களும் உதவி ஆய்வாளர் திருமிகு.கலைச்செல்வி அவர்களும் போக்சோ சட்டம் ,குழந்தைகள் உதவி எண், பெண்கள் உதவி எண், மற்றும் சைபர் க்ரைம் உதவி எண் குறித்து விழிப்புணர்வு கருத்துறை ஆற்றினர்.
(மதிய உணவு இடைவெளிக்குப்பின்)

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்ட நன்னடத்தை அலுவலர் திரு.நெப்போலியன் அவர்கள் குழந்தைகளுக்கான சட்டம் குறித்தும் ,குழந்தைகள் நல நீதிமன்றம் குறித்தும் உரையாற்றினார் அதே கோம் பின்னக சட்ட ஆலோசகர் திரு. பெருமாள் அவர்கள் பேசுகையில் தகவல் அறியும் சட்டம் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் புகார் மனு அளிப்பது குறித்தும் விவரித்து கூறினார் அதேகோம் பின்னக வழக்கறிஞர் திருமிகு.செம்மலர் அவர்களும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த சட்ட சட்டப்பிரிவுகளை ஒரு சில உண்மை சம்பவங்களுடன் விவரித்து கருத்துரை வழங்கினர்.

இறுதியாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் திருமிகு. ராஜாம்பாள் அவர்கள் ஒரு நாள் பயிலரங்க அனுபவம் குறித்து சட்ட தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார் .

நிகழ்ச்சியின் நிறைவாக அதேகோம் பின்னக விழுப்புரம் பெண்கள் ஆதார மைய கள ஒருங்கிணைப்பாளர் திருமிகு.புவனேஸ்வரி நன்றி உரை வழங்கினார்.

அதேகொம் பின்னக பெண்கள் ஆதார மையம் விழுப்புரம் ஒருங்கிணைக்கும் சட்ட தன்னார்வலருக்கான இந்த ஒரு நாள் பயிலரங்கத்தினை திண்டிவனம் ,கண்டமங்கலம் ,செஞ்சி வட்டார பெண்கள் கண்ணியம் மைய கள ஒருங்கிணைப்பாளர் திரு.லட்சுமிபதி,திருமிகு ஜெயபிரபா ,திருமிகு. ராஜகுமாரி மற்றும் திருமிகு.மஞ்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு திண்டிவனம் செஞ்சி கண்டமங்கலம் கோலியனூர் வட்டாரங்களில் இருந்து 27 பெண்கள் 8 ஆண்கள் என மொத்தம் 35 சட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Leave a comment