18/7/2023, இடம் அரசு. நடுநிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் .
நிகழ்ச்சி தொகுப்பாளர் பள்ளி தலைமை ஆசிரியர். திரு இளங்கோவன்
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திரு சதீஷ் அவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் விழுப்புரம்.மற்றும் ஆசிரிய பெருமக்கள் பள்ளிக் குழந்தைகள் ஆண்கள். 72
பெண்கள் 67 மொத்தம் 149 பங்கேற்றனர்.நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு ஆர் ஜான் போஸ்கோ செஞ்சி பெண்கள் கண்ணிய மையம் ஒருங்கிணைப்பாளர் .
பேசப்பட்ட கருத்துக்கள் Adecom பெண்கள் கண்ணியம் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சமுதாயத்தில் பாலின சமத்துவம் உருவாக்க மாணவர்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் கிடைக்கும் குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர் அளிக்கப்பட்டது. குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது மாணவர்கள் அனைவரும் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் குழந்தைகளுக்கான பிரச்சனைகளை உடனுக்குடன் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர் அளிக்கப்பட்டது மாணவர்களிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டது இறுதியாக பள்ளினுடைய உதவி தலைமை ஆசிரியர் திருமதி உலகநாயகி அவர்கள் நன்றி கூறினார்.



Leave a comment