குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை விழிப்புணர்வு கூட்டம்

தேதி 18/7/2023 , இடம். அரசினர் உயர்நிலைப்பள்ளி பாக்கம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பள்ளி தலைமை ஆசிரியர் திரு மாரி ஜோசப்

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர் திரு ராஜா பள்ளி மேலாண்மை குழு திரு மணிகண்டன் ஊரக வளர்ச்சி நேரு யுகேந்திரா மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பள்ளி குழந்தைகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை

நிகழ்ச்சியின் பொறுப்பாளர் திரு ஏழுமலை ஜெயபிரபா பொன்னியம்மாள் குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் மையம் பணியாளர்கள்

முதலில் மாணவர்களிடமும் ஆசிரியர்களையும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு முதலில் ஒரு பாடலுடன் தொடங்கப்பட்டது அகல்யா என்ற கலைக்குழு மாணவி அவர்கள் முதலில் பெண்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார் அடுத்தபடியாக ஒரு கலை நாடகம் ஒன்று நடத்தப்பட்டது நாடகத்தில் கிட்டு வேடம் அணிந்து வந்த திரு சந்துரு அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் நாடகத்தின் மூலம் வரவேற்றார் பிறகு நாங்கள் எதற்காக வந்து உள்ளோம் என்பதனை பற்றியும் நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது முதலில் திரு ஏழுமலை அவர்கள் மாணவர்களிடம் ஒரு பாடலுடன் தொடங்கினார் அடுத்தபடியாக நாடகம் நடத்தப்பட்டது நாடகத்தின் கருத்துகள் போதைப் பழக்கத்தை தடுத்தல் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எண் குறித்தும் குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என்பதை குறித்தும் பாலின சமத்துவம் குறித்தும் பெண் குழந்தைகளின் கல்வியில் உரிமை முக்கியத்துவம் குறித்தும் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதும் குறித்தும் விழிப்புணர்வு பயிற்சியில் அளிக்கப்பட்டது அடுத்தபடியாக திரு மாரி ஜோசப் தலைமையாசிரியர் அவர்கள் பேசுகையில் பெண் குழந்தை காப்போம் பெண் குழந்தையை கற்பிப்போம் என்ற தலைப்புடன் பேசத் தொடங்கினார்.

அதேகொம் பின்னகம் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்கு பாதுகாப்பு குறித்தும் நல்ல ஒழுக்க பழக்கங்களை குறித்தும் கல்வி கற்பதற்கான ஊக்குவிக்கும் விதத்தில் உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கொண்டூர் அலுவலகத்தின் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை நடத்தி சிறப்புடன் நடத்தியுள்ளனர் என்பதை பற்றி உரையாற்றினார். அடுத்தபடியாக திரு ராஜா பள்ளி மேலாண்மை குழு அவர்கள் பேசுகையில் பெண் குழந்தை பாதுகாப்பும் குறித்தும் குடும்பத்தில் பாலினம் சமத்துவத்தோடு இரு பிள்ளைகள் பிள்ளைகளையும் சமத்துவத்தோடு வளர்க்க வேண்டும் என்பதை பற்றியும் பெண் பிள்ளைகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் விளையாட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை பற்றியும் அவர் கூறினார். அடுத்தபடியாக திரு ஜெயபிரபா அவர்கள் பெண் விழிப்புணர்வு பாடு பாடல் ஒன்று பாடினார் . குழந்தைகளிடையே இக்கருத்துகளை பற்றியும் அவர்களிடம் சிறிது கருத்து விவரங்களை கேட்டறியப்பட்டது. அவர்களிடம் feed back கேட்கப்பட்டது. அங்கு கலந்து கொண்ட ஆசிரியர்களிடம் இத்தகவல் பற்றியும் கேட்டறியப்பட்டது. அதற்கு ஆசிரியர்கள் நீங்கள் நடத்திய நாடகம் கதை பாடல் மாணவர்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வாக சீக்கிரத்தில் புரிந்து கொள்ளும் விதமாக நீங்கள் விழிப்புணர்வு நடத்தி உள்ளீர்கள் என்பதனை பற்றி 10 98 நம்பரை நம்பரை பெண் குழந்தைகள் அல்ல ஆண் குழந்தைகளும் உங்களுடைய பாதுகாப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றியும் அவர்கள் கூறினார்கள். குழந்தைகள் போதைப் பழக்கத்தில் அடிமையாகாமல் எப்படி தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்கள் விரிவாக நாடகத்தின் மூலம் நடித்து காண்பித்தார்கள் மாணவர்களுக்கு இச்சமுதாயத்தில் கல்வி பெரும் முக்கியத்துவமாக வேண்டும் என்பதனை பற்றியும் அவர்கள் விழிப்புணர்வின் மூலம் கருத்துக்களை தெரிவித்ததற்கு பள்ளி மேலாண்மை அதேகொம் பின்னகத்திற்கும் குழந்தைகள் படைப்பாற்றல் சங்கம் கோண்டூர் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். குழந்தை தொழிலாளர்களை எப்படி நிறுத்த வேண்டும் என்பதனைப் பற்றியும் அனைவருக்கும் கட்டாய கல்வி வேண்டும் என்பதனைப் பற்றியும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். பொன்னியம்மாள் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு நன்றி உரை கூறி நிகழ்ச்சியை முடிவடைந்தது

Leave a comment