சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

19.07.2023, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அரசினர் பலவகை தொழில் ரகுநாதபுரம் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் இணைந்து சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் 65 நபர்கள் கலந்து கொண்டனர் இதில் 25 பெண்கள் 40 ஆண்கள் பயனடைந்தனர். இதில் கல்லூரியின் முதல்வர் திரு தமிழரசு தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி கே. கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமிகு உமாபதி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாபநாசம் மற்றும் செந்தில்குமாரி சக்தி சோசியல் வெல்பர் டிரஸ்ட் நிர்வாகி மற்றும் கல்லூரி ஆசிரியர் கலந்து கொண்டனர்.

இதில் பாபநாசம் உதவி ஆய்வாளர் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைப் பற்றி கூறினார். அதாவது குழந்தை திருமணம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுகிறது அதேபோல் மருத்துவமனையில் அதிக வழக்குகள் போக்சோ பதிவாகிறது பின்னர் இதையெல்லாம் காரணம் பெற்றோர்களும் மாணவர் செல்வனை நீங்கள் தான் உங்களுடைய திருமண வயது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் POSCO வழங்கப் பற்றி முழுமையாக நீங்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய வாழ்க்கையும் உங்களுடைய துணை யாரும் சரியான முறையில் தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும். அதேபோல் மாணவர்களும் சரியான முறையில் பெண்களை பார்க்க வேண்டும் நல்ல எண்ணத்தோடு பழக வேண்டும். ஆனால் தற்போது இருக்கிற சூழலில் பேருந்துகளிலும் பொது தளத்திலும் மிக வன்மத்தையும் பாலியல் தொல்லையிலும் நடைபெறுகிறது என்று பல்வேறு சட்டங்களை பற்றி அவர் எடுத்துரைத்தார் மேலும் வழக்கறிஞர் தமிழரசன் ஆகிய அவர் பேசும்போது நாங்கள் எட்டு மாவட்டத்தில் பணி செய்கிறோம் குறிப்பாக கடலூர் விழுப்புரம் தஞ்சாவூர் திருவண்ணாமலை செங்கல்பட்டு பாண்டிச்சேரி காரைக்கால் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஐந்து சட்டங்களுக்கு நாங்கள் பணிபுரிகிறோம் அதுவும் குறிப்பாக போக்ஷோ குழந்தை திருமணம் ஆட்கடத்தல் பாலியல் வன்முறை இன்று இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு குரல் கொடுத்து வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா அளவில் பணி செய்து வருகிறோம் குறிப்பாக அதிகாரிகளுடன் சமூக தொண்டு நிறுவனங்களோடும் சேர்ந்து பணியாற்றி வருகிறோம் எனவே நீங்களும் சிறப்பாக வளர வேண்டும் இணையதளத்தில் மற்றும் பேருந்து பயணத்தில் உங்களுடைய பாதுகாப்பையும் கவனமாக இருக்க வேண்டும் உங்களுடைய திருமண வயது 18 மற்றும் 21 என்பதை ஆணும் பெண்ணும் சரியாக அறிந்து கொண்டு நம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அதன் பிறகு திரு செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி உரை ஆற்றினார் நன்றி

Leave a comment