இடம் : வடதாரம் , நாள் : 15 8 2023
தேர்தல் 15 8 2023 சுதந்திர தினத்தன்று செஞ்சி வட்டம் வடதரம் கிராமத்தில் ADECOM பெண்கள் கண்ணியம் மையம் செஞ்சி வழிகாட்டுதலின் பேரில் பாலிக்கா பஞ்சாயத்து பொறுப்பிற்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் ஆணையர் : திரு முருகன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் வடதாரம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திரு ஜெகன் தன்னார்வலர். திரு வெங்கடேசன் அவர்கள் கல்லூரி மாணவர் .
தேர்தல் பார்வையாளர்: மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு
திரு ஜான்போஸ்கோ செஞ்சி பெண்கள் கண்ணிய மையம் .
மொத்த வாக்காளர்கள்.27 -ஆண் வாக்காளர். 13 பெண் வாக்காளர் 14
மொத்த வாக்குப்பதிவு 27
இந்த தேர்தலுக்கு முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பெயர் பட்டியல் சேர்த்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் ஆகியவை குறித்து பேசப்பட்டதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் அன்று முதலில் தேர்தல் விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்து இந்த தேர்தலை ஊராட்சி மன்ற தலைவர் திரு முருகன் அவர்கள் துவக்கி வைத்து adecom நிறுவனத்திற்கும் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
அரசு நடத்தும் தேர்தலை போலவே அனைத்து செயல்பாட்டிற்கும் அதே கிராமத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் மிகவும் ஒத்துழைப்பு அளித்தனர்.
வாக்குப்பதிவு நேரத்திற்கு முன்பாக மாணவர்களுக்கு வாக்காளர் பதிவு எண் வழங்கப்பட்டது.
பின்னர் மாணவர்கள் அந்த பதிவின் அடங்கிய அட்டைகளை எடுத்துக்கொண்டு வரிசையாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காண்பித்து கையில் மை வைக்கப்பட்டு வாக்கு சீட்டு பெற்றுக்கொண்ட பின்பு தங்களுடைய வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது .
மாணவ மாணவிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாக்குப்பதிவு மாலை ஐந்து முப்பது மணி அளவில் முடிவு பெற்றது .
பின்னர் வாக்கு சீட்டு பெட்டியை சீல் வைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது
வருகின்ற ஞாயிறு அன்று மாலை வாக்கு எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் .
#stopgewaltgegenfrauen #stopviolenceagainstwomen #stopviolence #responsiblemen #realmendonthitwomen #maitrinetwork #prevention #violenceprevention #violencepreventioneducation #indien #india @bmz_bund @bmz.de @karunatrust @karunausa


























Leave a comment