தேதி: 24/08/2023. இடம்: சிங்கனூர் புது காலணி
தொகுப்பாளர்: இல்லம் தேடி கல்வி ஆசிரியர்.
பங்கேற்பாளர்கள்:பெண் குழந்தைகள்:20
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
வளர்ச்சிக்கான உரிமை வாழ்வதற்கான உரிமை பங்கேற்பதற்கான உரிமை. ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.போதை ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் சம்மந்தமாக பள்ளியில் நடக்க இருக்கும் ஓவிய போட்டியில் மாணவர்களை கலந்துக் கொள்ளும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பாலிகா பஞ்சாயத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை குறித்து வாக்காளர், வாக்காளர் பட்டியல் பற்றி பேசப்பட்டது.
குழந்தை திருமணம்
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள்.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகள் இவர்களுக்கான அரசு மூலமாக கிடைக்கும் உதவித் தொகை,கல்வி உதவித் தொகை சம்மந்தமாக எடுத்துக் கூறப்பட்டது.
அனைவரும் மாதம் ஒரு முறை நடக்கும் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்பு கொண்டனர்.கூட்டத்தின் இறுதியில் குழந்தைகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.



Leave a comment