மங்கலம் கிராமத்தில் இளைஞர்களை ஒருங்கிணைத்து கோபம் மற்றும் ஆண்மையுடன் கோபத்திற்கு இருக்கும் தொடர்பு குறித்த பயிற்சி 26.08.2023 அன்று அளிக்கப்பட்டது
இளைஞர்களிடம் முந்தைய அமர்வின் நினைவூட்டல் செய்யப்பட்டது. பின்பு பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மூலம் அவர்களை பேச வைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு ஏற்ப துண்டு சீட்டுகளை தயார் செய்து நீங்கள் எப்பொழுது அழுவீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?உங்களுக்கு எப்போது கோபம் வரும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்பொழுது மகிழ்ச்சி அடைவீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களுக்கு எப்போது எரிச்சல் ஏற்படும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று துண்டு சீட்டில் எழுதி இளைஞர்களிடம் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டது. பின்பு இளைஞர்களுக்கு வந்த கேள்விகளுக்கு ஏற்ப பதில்களை இளைஞர்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பேசப்பட்டது. பின்பு அவர்களின் பகிர்தலுக்கு ஏற்றவாறு கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. பின்பு கோபம் எரிச்சல் வரும் பொழுது நாம் பிறரை கோபமாக பேசுவது அல்லது நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வது கையை கிழித்து கொள்வது, கண்ணாடியில் குத்துவது அல்லது கையில் இருக்கும் பொருட்களை எடுத்து உடைப்பது சாப்பிடாமல் தனிமையில் இருப்பது இவைகளை பின்பற்றி வருகின்றோம். அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் நம்மை விட பலமானவர்கள் யாரேனும் இருந்தால் நம்மளை துன்புறுத்திக் கொள்வோம் பலவீனமாக இருந்தால் அவர்களை துன்புறுத்துவோம். அவைகளை நாம் தவிர்க்க வேண்டும் சரியான புரிதலை பெற்று சரி எது தவறு எது என்பதனை உணர்ந்து செயல்பட வேண்டும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது என்பதனை விளக்கப்பட்டது.






Leave a comment