நாள் :6/9/2023 இடம் :கோண்டூர் கிராமம்
வேட்பாளர் எண்ணிக்கை :3
வாக்களித்தவர்கள் எண்ணிக்கை:
மாணவிகள் :35
மாணவர்கள் :40
தேர்தலுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் :ஊராட்சி மன்ற தலைவர் (திரு ஏழுமலை)
சமூக குழு உறுப்பினர் (திருமதி புஷ்பா)
இரண்டு தன்னார்வலர்கள்
முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓரிடமாக அமர வைத்தோம். பின்னர் 75 மாணவர்கள் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம் தேர்தல் நடப்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம். பின்னர் அனைவரையும் கைகளை தட்டும் படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன்
மதுமிதா. M
காவியா. D
துளசி. S
இந்த மூன்று வேட்பாளர்களும் தனித்தனியாக தங்களுக்கு வாக்குகள் பிரச்சாரம் செய்தனர்.பஞ்சாயத்து தலைவர் வருகை புரிந்து திரு ஏழுமலை சார் அவர்கள் வரவேற்று சால்வை அணிவித்தார்.மூன்று வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.திரு பஞ்சாயத்து தலைவர் அவர் மாணவ மாணவிகளிடம் பாலிகா பஞ்சாயத்தை பற்றி உரையாடினார்
அவர் மாணவிகளிடம் இந்த சிறு வயதிலேயே உங்களுக்கு ஆளுமை திறனை வளர்ப்பதற்கு இந்த பாலிகா பஞ்சாயத்துவளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இத்தேர்தல் முடிந்தபின் வெற்றியாளர்களை என் தலைமையில் ஒரு விழாவாக வைத்து பதவியேற்க வைப்பேன் என்று கூறினார். சமூக குழு உறுப்பினர் திருமதி புஷ்பா மாணவர்களிடம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டு எங்களுடன் தேர்தல் முடியும் வரை இருந்து மாணவர்கள் கையில் மை இட்டார்.பின்னர் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்
மாணவ மாணவிகளுக்கு ஆர்வமாகும் சந்தோஷமாகவும் இருந்தனர்.எங்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது
சில மாணவிகளிடம் பின்னோட்டம் கேட்டோம்.
வெற்றிச்செல்வி என்ற மாணவி நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் முதல் முறையாக ஓட்டு போடுகிறேன் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எங்களிடம் கூறினார்
















Leave a comment