நாள் : 09.09.2023 இடம்: தோகைப்பாடி கிராமம்
இன்று பாலிகா பஞ்சாயத்து தேர்தல் தோகைப்பாடியில் நடைபெற்றது.இதில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பிறகு வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்கள்.
வாக்காளர்களிடம் தேர்தல் பற்றியும் தேர்தலில் வாக்களிக்கும் விதம் பற்றியும் விழுப்புரம் அதேகொம் கண்ணிய மையம் களப்பணியாளர் சே. முருகன் அவர்கள் விளக்கம் அளித்தார்.
இத்தேர்தலில் ஐந்து வேட்பாளர்கள் தலைவர், செயலாளர், துணை தலைவர், ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட்டனர் இத்தேர்தலில் 43 வாக்காளர்கள் வாக்கு செலுத்தினார்கள். தேர்தல் அலுவலராக திருமதி அர்ச்சனா தன்னார்வலர் அவர்கள் செயல்பட்டார்கள் இறுதியாக மாணவ மாணவிகள் தேர்தல் குறித்து தங்களின் அனுபவ பகிர்வை பகிர்ந்து கொண்டார்கள்.
தேர்தல் முடிவு வருகிற 13.09.2023 புதன்கிழமை அன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.






Leave a comment