நாள் :9/9/2023 இடம் :N.R பாளையம் தன்னார்வலர் இல்லம்
வேட்பாளர் எண்ணிக்கை :4
வாக்களித்தவர் எண்ணிக்கை :55
மாணவர்கள் :25
மாணவிகள் :30
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை,ஜெயபிரபா & பொன்னியம்மா )
சிறப்பு அழைப்பாளர் :மோனிகா மற்றும் இல்லம் தேடி தன்னார்வலர் பமிலா
முதலில் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்து பின்னர் 55மாணவர்களின் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு சி ஆர் சி பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டோம் பின்னர் அனைத்து மாணவர்களிடமும் பாலிகா பஞ்சாயத்தை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம் பின்னர் அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்.வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தோம்
பாலா
காயத்ரி
சாதனா
ஐஸ்வர்யா
இந்த நான்கு வேட்பாளர்களும் மாணவர்களிடையே தனித்தனியாக பிரச்சாரம் செய்து ஓட்டுகள் சேகரித்தனர்.
பின்பு திரு ஏழுமலை சார் அவர்கள் வாக்கு எப்படி அளிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தினார்.
முதலில் நான்கு வேட்பாளர்களும்ஒவ்வொருவராக தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.பின்னர் அனைத்து மாணவர்களும் ஒவ்வொருவராக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.அனைவரும் சந்தோஷமாக இருந்தனர்
பின்பு பின்னோட்டம் கேட்கப்பட்டது.முதலில் ஒன்றாம் வகுப்பு மாணவி தன்னுடைய பின்னோட்டத்துக் கூறினார் அதில் நான் முதல் முறையாக ஓட்டு போட்டேன் எனக்கு சந்தோஷமாக உள்ளது என்று கூறி மழலை வார்த்தையில் பேசினார்.
பின்னர் மூன்று வேட்பாளர்கள் இடையே பின்னோட்டம் கேட்கப்பட்டது.பாலா என்ற வேட்பாளர் வெற்றியோ தோல்வியோ கலந்து கொள்வதே மிகவும் சந்தோஷம் என்று கூறினார்

























Leave a comment