பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (தேர்தல் திருவிழா)


நாள் :10/9/2023 இடம் :கொத்தம்பாக்கம் கிராமம் தன்னார்வலர் இல்லம் வேட்பாளர் எண்ணிக்கை :3
வாக்களித்தவர் எண்ணிக்கை: 60
மாணவர்கள் 39 மாணவிகள் :21
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :(ஏழுமலை மற்றும் ஜெயபிரபா)
சிறப்பு அழைப்பாளர் :சமூகக் குழு தலைவி (புவனேஸ்வரி)
முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்று சேர்த்து ஓர் இடமாக அமர வைத்தோம் பின்னர் 60 மாணவர்களிடம் முன்னிலையில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசை பற்றியும் அறிமுகப்படுத்தினோம்.அனைத்து மாணவர்களிடம் பாலிகா பஞ்சாயத்து பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.தேர்தலைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தினோம். அனைவரையும் கைதட்டும்படி கூறினோம்
வேட்பாளர்கள் அறிமுகம்
வாணிஸ்ரீ
ஜீவிதா
தனுஷினி

மூன்று வேட்பாளர்களும் மாணவர்களிடையே தனித்தனியாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களுக்காக வாக்குப் பிரச்சாரம் செய்தனர்.பின்னர் அனைவரும் ஓட்டு போட தயாராக இருந்தார்கள் ஆர்வத்துடனும் இருந்தார்கள்.முதலில் மூன்று வேட்பாளர்கள் தனித்தனியாக வாக்களித்தனர்.பின்னர் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய வாக்குகளை அளித்தனர்.பின்னர் அவர்களிடையே பின்னோட்டம் கேட்கப்பட்டது.பின்னோட்டம் மிக சிறப்பாக கூறினார்கள்

Leave a comment