சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாள்16.9.2023. .. இடம் சண்முகபுரம் மாணிக்க செட்டியார் நகர் குழந்தைகள் காப்பகம், புதுச்சேரி

அதே கோம் பின்னகம் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல் குறைத்தல் தீர்வு காணுதல் என்ற நோக்கத்தில் சமூகக் குழுக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமிகு சரஸ்வதி குழந்தைகள் காப்பக பொறுப்பாளர் அனைவரையும் வரவேற்றார்

.திருமிகு வித்யா குடும்ப ஆலோசகர் மக்கள் வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி நிகழ்ச்சிக்கான நோக்க உரையாற்றினார்.திருமிகு சித்ரலேகா ஓய்வு சமூகப்பணி மனநிலை பகுதி ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி கருத்துரை வழங்கினார். திருமிகு பர்மாவதி குடும்ப ஆலோசகர் அதே கோம் பின்னகம் அலுவலகத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள் மைத்திரி திட்டத்தின் அடிப்படையில் பணி செய்யும் மாவட்டங்கள் பற்றிய தகவல்களை பேசப்பட்டன. திரு முனைவர் மோகனசுந்தரம் மக்கள் வளர்ச்சி நிறுவனம் இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 30 பெண்கள், இரண்டு வளரின பெண்கள், 15 குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டன

Leave a comment