பாலிகா பஞ்சாயத்து தேர்தல் (ஓட்டு போடலாம் வாங்க)

நாள் :16/9/2023 இடம் :பாக்கம் கிராமம் மாரியம்மன் கோயில்
வேட்பாளர் எண்ணிக்கை :3 வாக்காளர் எண்ணிக்கை :116
மாணவர்கள் :60 மாணவிகள் :56
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் :திரு ஏழுமலை மற்றும் திருமதி ஜெயபிரபா
சிறப்பு அழைப்பாளர் :இல்லம் தேடி தன்னார்வலர் மஞ்சு
முதலில் அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து ஓர் இடமாக அமர வைத்து எங்கள் பெயர்களையும் மற்றும் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பணியினை பற்றி புரிதலை ஏற்படுத்தினோம்.பாலிகா பஞ்சாயத்தை பற்றியும் புரிதலை ஏற்படுத்தினும் தேர்தலை பற்றி கூறினோம்.பின்னர் ஓட்டு போடுவது எப்படி என்று செய்து காட்டினார் திரு ஏழுமலை ,
அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் இருந்தனர்.
வேட்பாளர் அறிமுகம்
மதுமிதா
.தமிழ் தென்றல்
சாதனா

மூன்று பேரும் தனித்தனியாக ஓட்டு சேகரித்தனர். பின்னர் ஓட்டு தொடங்கினார்கள்.ஒன்றாம் வகுப்பு மாணவர் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் வரை ஆர்வத்துடன் முதல் முதலாக ஓட்டு போட்டார்கள்.மாணவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.

Leave a comment