தேதி :-2.10.23 இடம் -விலைமாதேவி கிராம கோயில் வளாகம்.
நிகழ்ச்சி தொகுப்பாளர்- ஜான் போஸ்கோ பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளர் செஞ்சி.
மொத்த வாக்காளர் 27.
ஆண் வாக்காளர் 9 பெண் வாக்காளர்கள் 18.
பாலிகாபஞ்சாயத்து பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இன்று மாலை 5 மணி அளவில் தொடங்கியது இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் செய்திருந்தனர் மூன்று மாணவிகள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு வாக்குகள் சேகரித்தனர் பின்னர் தேர்தல் விதிமுறைகள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்
தேர்தல் அதிகாரிகளாக மூன்று கல்லூரி மாணவிகள் முன்னிருந்து சிறப்பான முறையில் இந்த தேர்தலை நடத்திக் கொடுத்தனர்.
இந்த தேர்தல் நடத்துவதற்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தவர் திரு வெங்கடேசன் தன்னார்வலர்.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு பெட்டியை திருமதி மஞ்சுளா வார்டு உறுப்பினர் அவர்களிடம் சீல் வைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது .
தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நன்றி









Leave a comment