பாலிகா பஞ்சாயத்து கூட்டம்- தேர்தல் முடிவு அறிவிப்பு

நாள்: 12.10.2023 , அரசமங்கலம் பாலிகா பஞ்சாயத்து தேர்தல் 09.09.2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் பி. மோனிகா, ப.இளமதி, பி.பிரியதர்ஷினிஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இத்தேர்தலில் 31 வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள் இதில் தலைவரா 12 வாக்குக்கள் பெற்று பிரியதர்ஷினி அவர்களும், செயலாளராக மோனிகா அவர்கள் 10 வாக்குகள் பெற்று செயலாளராகவும், ப.இளமதி அவர்கள் 9 வாக்குகள் பெற்று துணை தலைவராகவும் தேர்வாகி பாலிகா பஞ்சாயத்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள், மேலும் வாக்களித்த வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் இந்நிகழ்வினில் கள ஒருங்கிணைப்பாளர் சே.முருகன் மற்றும் கார்த்திகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டார்கள் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தினை தன்னார்வலர் பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்து கூட்டுத்தினை ஒருங்கிணைத்தார்கள்.

Leave a comment