பாலிகா பஞ்சாயத்து.

தேதி: 18//10/2023.இடம்: குடிசை பாளையம்
தொகுப்பாளர்: குமார் தன்னார்வலர்.
பங்கேற்பாளர்கள்: பெண் குழந்தைகள்: 20
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.லட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர், திரு. எட்டியப்பன் உளவியல் ஆலோசகர் அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
பேசப்பட்ட கருத்துக்கள்:
குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலமாக பாதுகாப்பு பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது.
குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.இதில்

#பாதுகாப்பிற்கான உரிமை

#வளர்ச்சிக்கான உரிமை

#வாழ்வதற்கான உரிமை

#பங்கேற்பதற்கான உரிமை.

ஆகியவை பற்றி எடுத்துக்காட்டுடன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.. கடந்த மாதம் நடைபெற்ற பாலிக்க பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இவர்களுக்கு அடுத்த மாதம் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் முன்னிலையில் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள்.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகள் இவர்களுக்கான அரசு மூலமாக கிடைக்கும் உதவித் தொகை,கல்வி உதவித் தொகை சம்மந்தமாக எடுத்துக் கூறப்பட்டது.

Leave a comment