இடம் ஜம்போதி இருளர் குடியிருப்பு
நாள் 21.10.23 நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமதி உமா தன்னார்வலர் ஜம்போதி.
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.14
கூட்டத்தின் துவக்கத்தில் மறைந்த Adecom நிறுவனத்தின் உடைய நிர்வாக அறக்காவலர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகள் குறித்து ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.உறுப்பினர்கள் அனைவரும் பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.தேர்தல் முடிவுகள் எப்போது என்று உறுப்பினர்கள் கேட்டனர் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.மாணவிகளின் திறன்களை அறிய பாடத்திட்டங்கள் குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து மாணவிகளும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.கூட்டத்தின் இறுதியில் திருமதி ஜெயந்தி அவர்கள் நன்றி கூறினார் கூட்டம் இனிதே முடிவுற்றது




Leave a comment