நாள்:- 23/10/2023 இடம் :- சிங்கனுர்
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை :55
இந்தக் கூட்டத்தில் தலைமையற்றவர் திருமதி. ஆனந்தி SI அவர்கள் மற்றும் தலைமை காவலர் பிரியா
கூட்டத்தின் துவக்கத்தில் இந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பு என்ன என்று கருத்துக்கள் கேட்டு அறிந்தோம் ஒவ்வொருவராக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கூட்டத்தின் அவசியம் மற்றும் பயன்பாடு குறித்து முதலில் உறுப்பினர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
- பாலின சமத்துவம் குறித்தும் தற்போது அதனுடைய அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தோம்.
- தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நடந்த சம்பவங்கள் ஒரு சிலவற்றை உதாரணத்துடன் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உணர செய்தோம் .
- பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண் குழந்தைகள்தான் உள்ளார்கள் இதற்கான காரணங்கள் என்ன என்றும் இது எவ்வாறு இந்தப் பிரச்சினையை சரி செய்வது என்றும் இந்த நிலை தொடர்ந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்றும் விளக்கம் அளித்தோம்.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் காவல் ஆய்வாளர் அவர்கள் முதலில் அன்பாக பேசி அமர வைத்து பின்பு புகார் கடிதங்களை பெற்றுக் கொள்வார்கள்
உங்கள் பகுதியில் நடைபெறும் மாதந்தோறும் பாலிக்கா பஞ்சாயத்து கூட்டத்திற்கு உங்கள் குழந்தைகளை கட்டாயம் அனுப்புமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டது
கூட்டத்தின் இறுதியில் ஃபீட்பேக் படிவம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டு எழுதி வாங்கப்பட்டது.
நன்றியுரை:- திருமதி உமா பாரதிமகளிர் குழு தலைவிஅவர்கள் நனறி கூறினார்.



Leave a comment