இடம். வடதாரம் நாள் 4. 11 .2023
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். பாலிக்க பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்
இன்று வட தாரம் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்று நடத்திய கிராம அளவிலான வல ஆதார வரைபட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தினுடைய அமைப்பை பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து வரைபடமாக வரைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் எவை என்பதையும் பாதுகாப்பற்ற இடம் எவை என்பதையும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கும் புரிகின்ற வகையில் பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்கள் வட்டமிட்டு காட்டி அவர்களுக்கு புரிய வைத்தனர்.
இதில் 3.முக்கிய பிரச்சனைகளாக
புதிய மின்கம்பம் அமைத்து தெரு விளக்கு அமைத்துக் கொடுக்கவும்.
சாலை வசதி செய்து கொடுக்கவும்.
வீடுகளில் தனிநபர் கழிவறை அமைத்தல்
போன்றவைகளை முக்கிய பிரச்சனைகளை அனைவருக்கும் புரிகின்ற விதமாகவும் அத்தியாவசிய தேவையாகவும் உணர வைக்கின்ற நிகழ்வாக அமைந்திருந்தது .
நிகழ்ச்சியின் இறுதியாக மேற்கண்ட பிரச்சினைகளை விரைவாக நிவர்த்தி செய்யக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் திரு முருகன் என்பவரிடம் மனுவாக எழுதி கொடுக்கப்பட்டது .
மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் நான் விரைவாக மேற்கொண்டு பணிகளை செய்து முடிக்கிறேன் என்று உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு. ஜான்போஸ்கோ. ஒருங்கிணைப்பாளர் .
பெண்கள் கண்ணிய மையம் .
செஞ்சி .மற்றும் தன்னார்வலர்கள். திருமதி ஜெயந்தி.
திரு ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர் நன்றி.





Leave a comment