மகளிர் குழுக்களுக்கான அரசு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த பயிற்சி.

இடம் .வில்லம்மா தேவி கிராமம் . நாள் .8 11 2023

பயிற்சியில் பங்கேற்றோர் எண்ணிக்கை : 30

பயிற்சி 08.11.2023, காலை 11 மணியளவில் துவக்கப்பட்டது பயிற்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் ஒரு சிறிய விளையாட்டின் மூலம் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் இன்றளவும் சமூகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    பாலின சமத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பு அரசு அமைப்புகள் மற்றும் அதனுடைய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மகளிர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருமதி ஜூலி PLF leader.அவர்கள் விளக்கம் அளித்தார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட்டால் யாரையெல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்தப் பிரச்சனைக்கான நியாயங்களை நாம் எவ்வாறு பெற முடியும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் செயல் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    குழு விவாதத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் இன்று சமூகத்தில் ஏற்படுகிறது என்றும் அந்த மாதிரியான பிரச்சனைகளை நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்று பட்டியலிட்டு குழு விவாதத்தில் விவாதிக்கப்பட்டு

    பயிற்சியின் இறுதியாக இந்த பயிற்சியின் மூலம் கற்றவை என்ன பெற்றவை என்ற என்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் திருமதி மஞ்சுளா அவர்கள் நன்றி கூறி கூறினார். இந்த பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயிற்சி நடத்திக் கொடுத்தது ஜான் போஸ்கோ ஒருங்கிணைப்பாளர் பெண்கள் கண்ணியம் மையம் .செஞ்சி.

    Leave a comment