ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும்அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குர் வேண்டுகோள்

புதுச்சேரி, நவ 21, ஆண்டுதோறும் பாலின சமத்துவ விருதுகள் வழங்கவேண்டும் என அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனரும் தொலைத் தொடர்பு இயக்குநரகத்தின் துணை இயக்குனருமான திரு. சிவக்குமார் கலந்துகொண்டு வேண்டுகோள்விடுத்தார். அதேகொம் நிர்வாக அறங்காவலரும், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும், தாய்லாந்து நாட்டில் செயல்படும் உலக பௌத்த சங்கதின் செயற்குழு உறுப்பினரும், அம்பேத்கர் பெண்கள் பகுத்தறிவு இயக்கத்தில் நிறுவன தலைவர் என பல பொறுப்புகளில் இருந்து பெண்களுக்காகவும் தலித் இ ன மக்களுக்காகவும் போராடிய திருமிகு. ப. லலிதாம்பாள் அவர்கள் அக்டோபர் 14-ஆம் தேதி அன்று இயற்கை எய்தினார். அவர்களை நினைவேந்தல் நவம்பர் 19ஆம் தேதி அன்று ஏபிஜே அப்துல் கலாம் கண்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வு கூட்டுக்குரல் நாடக இயக்கத்தின் பறை நிகழ்ச்சியுடன் துவங்கியது. ப. லலிதாம்பாள் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குநரம் தொலைத் தொடர்பு இயக்குநரகத்தின் துணை இயக்குனருமான திரு சிவக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது பாலினம் குறித்த பயிற்சிகளை நானும் ப. லலிதாம்பாள் அவர்களும் இளம் தம்பதியினர்களுக்கு அளித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அவர்கள் புகழ் நிலைத்திருக்க அதை தான் செய்ய வேண்டி இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். பாலின சமத்துவத்தில் செயல்பாட்டில் ஈடுபடுகின்ற ஐந்து நபர்களுக்கு ப. லலிதாம்பாள் அவர்களின் நினைவு நாளில் விருதுகள் வழங்க வேண்டும். ஐந்து விருதுகளில் நான் நான்கு விருதுகள் கட்டாயமாக பெண்களுக்காக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆண்டுதோறும் பாலின சமத்துவம் புத்தகம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ப. லலிதாம்பாள் பற்றிய கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் விழுப்புரம், தஞ்சாவூர் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காரைக்கால், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பங்காளர்கள், அரசு அதிகாரிகள், அதேகொம் பின்னக பணியாளர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது லலிதாம்பாள் நினைவு கூறும் வகையில் திருமதி. லலிதாம்பாள் எழுதிய- அம்பேத்கரின் பௌத்தம், லலிதாம்பாள்- 54, பாலின சமத்துவ இயக்கத்தின் பெண்ணிய தலைவர் ப. லலிதாம்பாள் என மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அதனை மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள் வெளியிட , மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. கந்தசாமி அவர்களும் பெண்கள் பகுத்தறிய இயக்கத்தின் தலைவி திருமிகு. மணிமேகலை ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு. மூர்த்தி அவர்கள் வரும் ஆண்டு முதல் லலிதாம்பாள் இறந்த நாளை பௌத்த நாளாக கொண்டாடுவோம் என கூறினார். மதிய அமர்வில் மாண்புமிகு. பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. லக்ஷ்மிநரநாயன் கலந்துகொண்டு ப. லலிதாம்பாள் மலரஞ்சலி செலுத்திவிட்டு அவரின் நினைவு புகைப்பட கட்சி அரங்கை திறந்துவைத்தார்.

இதில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களும் தங்களது நினைவலைகளை மற்றும் வரும் காலங்களில் லலிதாம்பாள் அவர்களின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்க ஆதரவாக இருப்போம் என்றும் உறுதியளித்தனர். நிகழ்வின் போது பங்கேற்பாளர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதேகொம் பின்னகத்தின் சட்ட ஆலோசகர் திரு. சீனு பெருமாள் பல்கலைக்கழத்தில் ப.லலிதாம்பாள் அவர்களின் பெயரில் அறக்கட்டளை துவங்கி மாணவர்களுக்கு பாலின சமத்துவ கருத்தங்கம் நடத்த இருப்பதாகவும் உறுதியளித்தார். நிகழ்வு ஒருநாள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 150 மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a comment