இடம் . Modiyour village நாள் 21.11.23.
நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு தம்ம தேவா தன்னார்வலர் மொடையூர் கிராமம்
கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்.16.
கூட்டம் புத்த வந்தனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
கூட்டத்தின் துவக்கமாக கிராம அளவிலான பல ஆதார வரைபடம் வரைவதற்கான திட்டமிட்டோம் போதிய உறுப்பினர் வருகை தரவில்லை மற்றும் அது சமயம் மழை வந்ததால் அந்த நிகழ்வை நடத்த இயலவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மாணவர்கள் போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் பருவ கால நோய்கள் அதிகம் பரவுவதால் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மற்றும் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளதால் குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க செல்வது போன்ற செயல்கள் செய்ய வேண்டாம் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது
முக்கிய தகவலாக இந்த காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பிரச்சனைகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றது எனவே பெண் குழந்தைகள் தங்களுக்கு எந்த பிரச்சனைகள் என்றாலும் பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது
கூட்டத்தின் இறுதியில் திருமதி ஜெயந்தி அவர்கள் நன்றி கூறினார் கூட்டம் இனிதே முடிவுற்றது நன்றி.









Leave a comment