புதுச்சேரி ,25.11.2023 அதேகொம் பின்னகம் , மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பெண் ஒளி கூடம் ஒருங்கிணைக்கும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான16 நாட்கள் தொடர் பிரச்சாரம் முதல் நாள் நிகழ்ச்சியின் துவக்கமாக திருமதி லலிதாம்பாள் நிர்வாக அறங்காவலர் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருமிகு சாந்தி, குடும்ப நல ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் அதைத் தொடர்ந்து திருமிகு காயத்ரி ஸ்ரீகாந்த் ,இரவி நிறுவன இயக்குனர் துவக்க உரையாற்றினார். நகைச்சுவை கலந்த விளையாட்டுடன் துவங்கினார். பெண்ணின் சுதந்திரம் மற்றும் பெண்ணுரிமை பற்றி கூறினார்.பெண்ணின் கர்ப்பப்பை பற்றி விளக்கினார் .அதனைத் தொடர்ந்து திருமிகு அத்தாட்சியா மேரி வழக்கறிஞர் ,அவர்கள் குடும்ப வன்முறை சட்டம் 2005 பற்றி விளக்கினார். திருமதி காமாட்சி FCC குடும்ப நல ஆலோசகர் அவர்கள், ஆலோசனை என்றால் என்ன யாருக்கெல்லாம் ஆலோசனை வழங்கலாம் பெண்களுக்கு எப்படி ஆலோசனை வழங்குவது என்பது பற்றி விரிவாக விளக்கினார். திருமிகு ரோஸ்லின் ஷீலா, சமூகப் பணியாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அவர்கள் நாம் ஏன் இந்த நிகழ்வை கொண்டாடுகிறோம் எதற்காக கொண்டாடுகிறோம் என்பது பற்றி விரிவாக கூறினார் குடும்ப வன்முறை என்றால் என்ன அது துவங்கிய வருடம் மற்றும் குடும்ப வன்முறை வகைகள் ஆன உடல் ரீதியான வன்முறை மனரீதியான வன்முறை பாலியல் துன்புறுத்தல் தனிமைப்படுத்துதல் அச்சுறுத்தல்கள் பொருளாதார வன்முறை மேலும் குடும்ப வன்முறை எப்படி நிகழ்கிறது? அது தொடர்பான அரசாங்க உதவிகள் அரசாங்கத் திட்டங்கள் பற்றி விளக்கினார். மேலும் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை எண் 181 பற்றியும் விளக்கி கூறினார். அடுத்ததாக திருமிகுதெரேசா ,சகோதரி இல்லம் ஆலோசகர் அவர்கள் பேசுகையில் குடும்ப வன்முறை தொடர்பான எடுத்துக்காட்டுகள் மற்றும் அது சம்பந்தமான வழக்குகள் பற்றி விளக்கினார். ஒரு சிறிய ஆக்டிவிட்டி மூலம் பங்கேற்பாடுகளை உற்சாகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து குடும்ப வன்முறை தொடர்பான அரசாங்கத் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது அதனை தெரிந்து கொள்வது பற்றியும் விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக திருமிகு மோனிகா அவர்கள் நன்றியுரை வழங்கினார்



















Leave a comment