இடம் : வாழ்வாதார மைய கட்டிடம் சொரத்தூர் கிராமம்
நாள் .26 11 23
பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் 18.
பயிற்சி ஒருங்கிணைப்பு . ஜான் போஸ்கோ மற்றும் ஜெயந்தி பெண்கள் கண்ணிய மையம்.
செஞ்சி.
பயிற்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருமதி மங்கை நாயகி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
சொரத்தூர் கிராமத்தில் வளர் இளம் பெண்களுக்கான தொடர் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் துவக்கமாக இப்பயிற்சி குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பயிற்சியில் அங்கன்வாடி ஆசிரியை பருவ வயது மாற்றங்கள் குறித்தும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் இந்தப் பருவத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் பெண் குழந்தைகளுக்கான அரசினுடைய திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். மற்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும் குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொறுப்புகளும் கடமைகளும் குறித்து குழுக்களாக பிரித்து தங்களுடைய கருத்துக்களை தங்களுடைய கருத்துக்களை chart மூலம் எழுதி ஒவ்வொரு குழுக்களாக விளக்கம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்களும் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியாக மாணவரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தவர் தன்னார்வலர் திருமதி ராஜவேணி அவர்கள்.















Leave a comment