தேதி :13/12/2023.
ஊர் :பள்ளி புதுப்பட்டு.
இடம் : ஆதி திராவிட துவக்கப்பள்ளி.
பங்கேற்பாளர் எண்ணிக்கை :12.
மனு அளிப்பது பற்றிய பாலிகா பஞ்சாயத்து கூட்டம்.
முதலில் அனைத்து மாணவிகளையும் பாடல் ஒன்றை பாட வைத்தனர். பின்னர் முந்தைய கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்பை பற்றி நினைவூட்டினர். அப்போது அனைத்து மாணவிகளும் பாதுகாப்பான இடம் பாதுகாப்பற்ற இடம் என்று பதிலளித்தனர். அந்த இடத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கேட்டனர்.
அதற்கு மாணவிகள் தெரியவில்லை என்றார்கள். வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி அன்று அவர்கள் ஊரில் கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது அதில் தங்கள் மனு கொடுத்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். பின்பு எப்படி மனு எழுதுவது என்று ஒருங்கிணைப்பாளர்கள் கற்று கொடுத்தனர்.





Leave a comment