தேதி :9/12/2023 கிராமத்தின் பெயர் :மருதூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :திருமதி ஜெயபிரபா
பங்கேற்றவர்களின் எண்ணிக்கை :100
வரவேற்புரை :திரு ஏழுமலை
சிறப்புரை :G.ராஜேஷ் பள்ளி ஆசிரியர் மற்றும் S.
சேகர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலையம்
முதலில் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து
பறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கண்டு கழித்தனர்.பின்னர் பாலின சமத்துவத்தை பற்றி ராஜேஷ் பள்ளி ஆசிரியர் அவர்கள் பேசினார் அவர் பேசுகையில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் சமம் பெண் ஆண் குழந்தைகளை வளர்ப்பது போல் பெண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்பதை பற்றியும் புரிதலை ஏற்படுத்தினார் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கும் உரிமைகள் போல் எடுத்துக்காட்டாக உணவு, உடை, தைரியம், தனியாக வெளியில் செல்வது ,கல்வி ,போன்ற அனைத்து உரிமைகளும் பெண் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி கூறினார்
பின்னர் பாலின சமத்துவத்தை பற்றி ஒரு சிறிய நாடகம் திரு ஏழுமலை அவர்கள் மூலம் அரங்கேற்றம் பெற்றது.
அதைக் கண்டு அனைத்து ஊர் மக்களும் வியந்து பார்த்தனர்
பின்னர் திரு ஏழுமலை அவர்கள் ஒரு கிராமிய பாடல் பாடினார்
கூட்டுக் குரல் கலைக்குழு ஒயிலாட்டம் மற்றும் கோலாட்டம் ஆடினார்கள்.
மருதூர் PLV:திரு வள்ளல் அவர்கள் அவர்கள் ஊரில் உள்ள மக்களுக்கு பாலின சமத்துவத்தை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசினார் அவர் தன்னுடைய பெண் குழந்தையை வளர்க்கும் முறையைப் பற்றியும் ஆண் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் பேசினார் எங்கள் வீட்டில் ஆண் குழந்தைக்கு என்ன முன் என்ன முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே முக்கியத்துவம் முன்னுரிமை என் பெண் குழந்தைக்கு கொடுக்கின்றோம் எங்கள் வீட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை பற்றி புரிதலை ஏற்படுத்தினார் ஊர் மக்களுக்கு
பின்பு அனைத்து ஊர் மக்களும் தன் கைகளை நீட்டி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இறுதியில் திருமதி ஜெயபிரபா நன்றி உரை கூறினார். நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது



Leave a comment