இன்று 14.12.2023 அதேகொம் பின்னகம் பெண்கள் கண்ணியம் மையம் திண்டிவனத்தில் சமூக நலத்துறை மற்றும் பெண்கள் , குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை,குடும்ப வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்,பெண்குழந்தைகளை காப்போம் தொடர்பான பேரணி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு. இந்த பேரணி நிகழ்ச்சி மாண்புமிகு. K.S.மஸ்தான் ,வெளிநாடு வாழ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களால் கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தின்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய ஒருங்கிணைப்பாளர் திரு.லக்ஷ்மிபதி வரவேற்புரை வழங்கினார். பெண்களுக்கான வரதட்சணை கொடுமை குறித்து சமூகநலத்துறை பாதுகாப்பு அலுவலர் திருமிகு.முத்தமிழ்ஷீலா அவர்கள் கலந்துரையாடினார், இவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் திருமிகு.லூசியா பெண்களுக்கான சட்டங்கள குறித்து விளக்கி கூறினார். இவரை தொடர்ந்து அதேகொம் பின்னக சட்ட ஆலோசகர் திரு.சீனுபெருமாள் அவர்கள் பெண்களுக்கான சுய சிந்தனை அதன் அவசியம் குறித்து பேசினார். ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் திருமிகு.பத்மாவதி அவர்கள் சேவை மையம் குறித்த உதவி எண்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியின் சிறப்புவிருந்தினர்,மாவட்ட சமூக நல துறை அலுவலர் திருமிகு.ராஜம்மாள் சமூக நலத்துறை திட்டங்களில் மாணவிகளுக்கு முக்கிய திட்டமான புதுமை பெண் திட்டம்,பெண்களுக்கு எதிரான வரதட்சணை வன்கொடுமை மற்றும் பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்,பெண்குழந்தைகளை காப்போம்குறித்து விளக்கி கூறினார். இறுதியாக அதேகொம் பின்னகம் பெண்கள் ஆதார மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஆர்த்தி எப்சிபா அவர்கள் நன்றியுரை வழங்கினார். அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் செஞ்சி ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான்போஸ்கோ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்,மேலும் அதேகொம் பின்னக பணியாளர்கள் மனநல ஆலோசகர் திரு.எட்டியப்பன், கள ஒருங்கிணைப்பாளர் திரு.முருகன்,சட்ட தன்னார்வலர் திருமிகு.விஜயலக்ஷ்மி நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். 267 நர்சிங் மாணவிகள், 560 கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.






















Leave a comment