இன்று 16.12.2023 அதேகொம் பின்னகம், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு & மனிதநேய மறுவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்த “நீதிக்கான பயணம் எங்கள் குரலை மீட்டெடுகிறது” என்ற தலைப்பில் 16 நாள் தொடர் பிரச்சாரத்தின் பேரணி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் திரு. முருகன் காவல் ஆய்வாளர் & திரு. சீனு பெருமாள் சட்ட ஆலோசகர் அதேகொம் பின்னகம் அவர்களின் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கூட்டு குரல் நாடக இயக்கத்தின் பறை இசையுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியர்கள், சமூக குழுக்கள், காவல்துறை அதிகாரிகள், தன்னம்பிக்கை கலைக்குழு இயக்குனர். எலிசபத் மற்றும் 30 மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர். இந்த பேரணியானது ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் துடங்கி அதேகொம் பின்னாக அலுவலகம் வரை நடந்தது. திருமிகு . பர்மாவதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமிகு. எலிசபெத் அவர்கள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டுக்குரல் நாடக இயக்கம் கலைக்குழுவினர் பங்கேற்று நிகழ்ச்சிய சிறப்பித்துக் வழங்கினர். திருமிகு. ரோஸ்லின் ஷீலா மற்றும் மனிதநேய மறுவாழ்வு குழுமம் இயக்குனர் நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றினார்.











Leave a comment