பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த பேரணி பிரச்சாரம்
நிகழ்ச்சி ஏற்பாடு மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் காரைக்கால், விபெட்ஸ் நிறுவனம் காரைக்கால் , அதேகொம் பின்னகம் புதுச்சேரி
இடம்: தொண்டமங்கலம், தல தெரு, காந்தி நகர், கோட்டுச்சேரி
நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள்: 187 பெண்கள் 96 இளைஞர்கள் 37 ஆண்கள் 42 வளர் இளம் பெண்கள் 12
வரவேற்புரை திருமிகு கீதா ஒருங்கிணைப்பாளர் விபெட்ஸ் நிறுவனம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
நோக்க உரை திருமிகு சுதா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பேசுகையில் அதே கொம் பின்னகம் 30 ஆண்டுகளாக செய்து வரும் பணிகளை விளக்கினார் வருடம் வருடம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை 16 நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தொடர் பிரச்சாரம் செய்து வருவோம் அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக காரைக்கால் மாவட்டத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணி செய்து வரும் விவரங்களை கூறினார் பின்பே பெண்களுக்கு வன்முறை தெரிந்த நபர்களாலும் வீட்டில் உள்ளவர்களாலும் நடக்கின்றது என்பதனை எடுத்துக் கூறினார் எனவே அப்படி பிரச்சினை நடந்தால் அவர்கள் முன்வந்து அவர்களின் பிரச்சனைகளை அணுகுவதற்கான புரிதலை ஏற்படுத்தினார் பெண்ணிற்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான புரிதலை ஏற்படுத்தினார் பெண்களுக்கு ஏற்படும் பொருளாதார வன்முறை உடல் ரீதியான வன்முறை மன ரீதியான வன்முறை பாலியல் வன்முறை குறித்து விளக்கினார் பெண்களுக்கு குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான எந்த விதமான வன்முறை ஏற்பட்டாலும் உடனடியாக எங்களைப் போன்ற தன்னார்வலர் அமைப்புகளை அணுகி தீர்வு காண வேண்டும் உடனடியாக காவல் நிலையம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1.81 என்ற எண்ணை அணுகி தீர்வு காணலாம் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 1098 என்ற எண்ணை அணுகி தீர்வு காணலாம் என்று விளக்கினார்.
பின்பு மக்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பொருள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வெல்லட்டும் வெல்லட்டும் பாலின சமத்துவம் வெல்லட்டும்
போராடுவோம் போராடுவோம் பெண்ணுரிமைக்காக போராடுவோம்
தடுப்போம் தடுப்போம் குழந்தை திருமணத்தை தடுப்போம்
கொடுக்க மாட்டோம் கொடுக்க மாட்டோம் வரதட்சனை கொடுக்க மாட்டோம்
வாங்க மாட்டோம் வாங்க மாட்டோம் வரதட்சணை வாங்க மாட்டோம்
தடுத்திடுவோம் தடுத்திடுவோம் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து விடுவோம்
தடுத்திடுவோம் தடுத்திடுவோம் போதை பழக்கத்தை தடுத்திடுவோம்
போற்றுவோம் போற்றுவோம் பெண் தலைமைத்துவத்தை போற்றுவோம்
தடுத்திடுவோம் தடுத்து விடுவோம் போதைப்பொருள் விற்பனையை தடுத்து விடுவோம்
போற்றுவோம் போற்றுவோம் சாவித்திரிபாய் உள்ளே புகழை போற்றுவோம்
ஓங்கட்டும் ஓங்கட்டும் அன்னை மீனாம்பாள் புகழ் ஓங்கட்டும்
போற்றுவோம் போற்றுவோம் லலிதாம்பாள் புகழை போற்றுவோம்
மதித்திடுவோம் மதித்திடுவோம் பெண் உரிமைகளை
மதித்திடுவோம்
படிக்க வைப்போம் படிக்க வைப்போம் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுக்கு நிகராக பனிக்க வைப்போம்
என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றினர்
சிறப்புரை
திரு முத்துகிருஷ்ணன் மூத்த வழக்கறிஞர் அவர்கள் பேசுவதில் வரதட்சணை தடுப்புச் சட்டம் 2005 இல் கொண்டுவரப்பட்டது சட்டத்தில் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கு தன் கணவர் அல்லது தன் கணவனை சார்ந்த உறவினர்களால் பிரச்சனை ஏற்பட்டால் இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதனை விளக்கினார் பின்பு போக்சோ சட்டம் குறித்து விளக்கினார் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணிற்கும் 21 வயதிற்கு கீழ் உள்ள ஆணிற்கும் அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாதவாறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் சட்டத்தில் 90 நாட்களுக்கு ஜாமின் வழங்கப்படாது மிகவும் கடுமையாக தண்டனை வழங்கப்படும் என்பதனை விளக்கினார் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் குறித்து விளக்கினார் குழந்தை திருமணம் நடப்பதினால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்து கூறினார்
திரு கீர்த்திவாசன் வழக்கறிஞர் அவர்கள் பேசுகையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் காரைக்கால் நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகின்றது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலவசமாக சட்ட உதவி செய்து வருகின்றது இலவச வழக்கறிஞரை பரிந்துரை செய்யப்படும் எனவே பெண்கள் தைரியமாக அவர்களின் பிரச்சனைகளை வெளியில் சென்று கூறி அதற்கான தீர்வு காணலாம் என்று விளக்கினார் பின்பு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பெண்களுக்கு இலவச சட்டப் பணிகள் ஆணையம் மூலம் தீர்வு வழங்கப்படும் என்பதனை விளக்கினார்
கருத்துரை திருமிகு புவனேஸ்வரி விபெட்ஸ் நிறுவனர் அவர்கள் பேசுகையில் ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் இருவரையும் சமமாக வளர்க்க வேண்டும் சமமாக வளர்த்தால் பெண்களுக்கு வன்கொடுமை நடப்பதனை தடுக்க முடியும் எனவே குழந்தைகளிலிருந்து சமத்துவத்தோடு வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என்றும் பெண்களுக்கு கல்வி அவசியம் கல்வி மட்டுமே அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் எனவே அவர்களுக்கு வன்முறை புரிவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதனை எடுத்துக் கூறினார் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் என்ன என்பதனை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு அதிகம் உறவினர்களாலும் நண்பர்களாலும் நடைபெறுகின்றது எனவே பெண் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் பள்ளிக்கு சென்று வந்தவுடன் குழந்தைகளிடம் பேச வேண்டும் என்ன நடந்தது என்பதனை கேட்டு அறிய வேண்டும் குழந்தைகளிடம் குழந்தைகளை போல் பழக வேண்டும் என்று எடுத்துக் கூறினார் பின்வே பலரிடம் பெண்கள் கைபேசியினை கவனமாக கையாள வேண்டும் அதில் தேவையற்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும் தேவையான தகவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறினார் போன் மூலம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதனை எடுத்துக் கூறினார் டிபியில் புகைப்படம் பதிவு செய்வது ஸ்டேட்டஸ் புகைப்படத்தை பதிவு செய்வது தவிர்க்க வேண்டும் புகைப்படத்தினை மாஃபிங் செய்து வெளியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது எனவே புகைப்படத்தை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்
திரு சுந்தர் கிராமநல அலுவலர் அவர்கள் பேசுகையில் பெண்கள் குழுவாக செயல்பட வேண்டும் எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் குழுவின் பேசி முடிவு எடுக்க வேண்டும் யாரை அணுக வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை பெற வேண்டும் பெண்கள் சேமிப்பை உருவாக்க வேண்டும் சேமிப்பை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று விளக்கினார் பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உள்ளூர் புகார் குழு மூலம் வழக்கு பதிவு செய்யலாம் என்பதனை எடுத்துக் கூறினார் மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் புகார் குழுவை பற்றி விளக்கினார்.
திரு சிவனேசன் நேரு யுவகேந்திரா அமைப்பு அவர்கள் பேசுகையில் பெண்கள் ஒன்றிணைந்து சுய தொழில் செய்ய வேண்டும் பயிற்சி அரசு கொடுக்கின்றது இந்தியன் வங்கி மூலம் பெண்களுக்கு அதிக அளவில் பயிற்சி கொடுத்து வருகின்றது எனவே நீங்கள் குழுவாக செயல்பட்டு இந்தியன் வங்கி மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் அதன் மூலம் நீங்கள் சுய தொழில் அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது அதற்கான உதவிகளை நாங்கள் செய்து கொடுக்கின்றோம் என்றும் அரசு திட்டங்களை குறித்தும் விளக்கினார் இளைஞர்கள் வேலை வாய்ப்பு குறித்தும் விளக்கினார் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்தும் விளக்கினார்.
































Leave a comment