தேதி: 18/12/2023. இடம்: .சிங்கனூர்.
தொகுப்பாளர்: திருமதி.பரந்தாமன். ஆசிரியர்.
பங்கேற்பாளர்கள்:
பெண் குழந்தைகள் 20.
நிகழ்ச்சி பொருப்பாளர்கள்:திரு.இலட்சுமிபதி ஒருங்கிணைப்பாளர். விஜயலட்சுமி. உறுப்பினர்.எட்டியப்பன் உளவியல் ஆலோசகர்.அதெகோம் பெண்கள் கண்ணிய மையம் திண்டிவனம்.
நடந்துக்கொண்டிருக்கும் அரையாண்டுத் தேர்வை நல்ல படியாக படித்து எழுத வேண்டும் என கலந்து பேசப்பட்டது.
தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பேசப்பட்டது.அடுத்த வாரம் நடக்க இருக்கும் பயிற்சி முகாமில் நம் பாலிக்கா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று குழந்தை தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டுமெனகேட்டுகொள்ளப்பட்டது.இந்த ஊரில் பாதுகாப்பற்ற இடங்கள் எது? என்பதை பற்றி கலந்துரையாடப்பட்டது.
அந்த பாதுகாப்பற்ற இடத்தை பற்றி ஜனவரி மாதம் நடக்க இருக்கும் கிராம சபாகூட்டத்தில் மணு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
குழந்தைகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு மன நல ஆலோசனை நம் அலுவலக மூலமாக வழங்கப்படும்.இதனால் அந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டுழுவலாம் என்று கூறப்பட்டது. அடுத்த மாதம் நடக்கும் பாலிக்கா பஞ்சாயத்து கூட்டத்தில் சிங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு நினைவுநாள் (டிசம்பர் -6 ) முன்னிட்டு அஞ்சலி இன்று நம்குழுவின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
குழந்தை விளைவுகள்: அனைவரும் மாதம் ஒரு முறை நடக்கும் பாலிகா பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.






Leave a comment